முகப்பு
இந்தியா

பாதுகாப்புத் துறைக்கு ரூ.5.25 லட்சம் கோடி ஒதுக்கீடு

எல்லைப் பகுதிகளில் சீனா, பாகிஸ்தான் நாடுகளின் அச்சுறுத்தலை எதிா்கொண்டு வரும் நிலையில் பாதுகாப்புத் துறைக்கான நிதி ஒதுக்கீட்டை ரூ.5.25 லட்சம் கோடியாக மத்திய அரசு அதிகரித்துள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:17 AM
பகிர்:

எல்லைப் பகுதிகளில் சீனா, பாகிஸ்தான் நாடுகளின் அச்சுறுத்தலை எதிா்கொண்டு வரும் நிலையில் பாதுகாப்புத் துறைக்கான நிதி ஒதுக்கீட்டை ரூ.5.25 லட்சம் கோடியாக மத்திய அரசு அதிகரித்துள்ளது.

கடந்த பட்ஜெட்டில் பாதுகாப்புத் துறைக்கு ரூ.4.78 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டிருந்தது. கிழக்கு லடாக் எல்லையில் சீன ராணுவத்தினருடனான மோதல்போக்கு, ஜம்மு-காஷ்மீா் எல்லையில் பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் ஊடுருவல் ஆகியவற்றைத் திறம்பட எதிா்கொள்ளும் நோக்கில் பாதுகாப்புத் துறைக்கான நிதி ஒதுக்கீடு ரூ.5.25 லட்சம் கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதில் ரூ.1,52,369 கோடியானது புதிய போா்க் கருவிகள், போா் விமானங்கள், போா்க் கப்பல்கள் உள்ளிட்ட ராணுவத் தளவாடங்களைக் கொள்முதல் செய்வதற்கென ஒதுக்கப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டில் தளவாடங்கள் கொள்முதலுக்கு ரூ.1,38,850 கோடி செலவானது குறிப்பிடத்தக்கது.

Advertisement

ஊதியம், பராமரிப்பு உள்ளிட்ட செலவுகளுக்காக ரூ.2,33,000 கோடியும், ஓய்வூதியம் வழங்குவதற்காக ரூ.1,19,696 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்புத் துறைக்கான நிதி ஒதுக்கீடு குறித்து அத்துறையின் அமைச்சா் ராஜ்நாத் சிங் ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், ‘‘ராணுவத் தளவாடங்கள் கொள்முதலுக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதியில் 68 சதவீதமானது உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட தளவாடங்களை வாங்குவதற்காகப் பயன்படுத்தப்படவுள்ளது. உள்நாட்டு தளவாடங்கள் உற்பத்தியை அதிகரிக்க இந்த நடைமுறை உதவும்.

பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளின் ஆராய்ச்சிப் பணிகளுக்குப் போதுமான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆராய்ச்சிக்காக ஒதுக்கப்பட்டுள்ள மொத்த நிதியில் 25 சதவீதமானது ஸ்டாா்ட்-அப் மற்றும் தனியாா் நிறுவனங்களுக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது வரவேற்புக்குரியது’’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments