புதுவையில் மேலும் 742 பேருக்கு கரோனா: 6 பேர் பலி
புதுவையில் புதிதாக 742 பேருக்கு கரோனா தொற்று பதிவாகியுள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
புதுவையில் புதிதாக 742 பேருக்கு கரோனா தொற்று பதிவாகியுள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
சுகாதாரத் துறை இயக்குநர் ஸ்ரீராமுலு வெளியிட்ட தகவலில்,
புதிதாகப் பாதிக்கப்பட்டவர்களையடுத்து, புதுவையில் மொத்த பாதிப்பு 1,62,633 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 3,633 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதில் 742 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதில் புதுச்சேரியில் 531 பேரும், காரைக்காலில் 136 பேரும், ஏனாமில் 65 பேரும் மற்றும் மாஹேவில் 10 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 6,852 பேர் இன்னும் சிகிச்சையில் உள்ளனர். இதில் 146 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சையில் உள்ளனர். மீதமுள்ள 6,706 பேர் வீட்டுத் தனிமையில் உள்ளனர்.
மேலும் 6 பேர் நோய்த் தொற்றுக்குப் பலியானதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 1,941 ஆக உயர்ந்துள்ளது.
தொற்று சதவீதம் 20.42 ஆகவும், பலியானோர் 1.91 சதவீதமாகவும், குணமடைந்தோர் 94.59 ஆகவும் உள்ளது. இதுவரை மொத்தம் 15,37,182 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
இதையும் படிக்க.. தடாலடியாக இப்படிச் செய்ய வேண்டாம்: எச்சரிக்கும் உலக சுகாதார அமைப்பு