இந்தியா

கல்வான் மோதலில் அறிவித்ததைவிட சீன தரப்பில் அதிக வீரா்கள் பலி: ஆஸ்திரேலிய இதழ் தகவல்

கல்வான் பள்ளத்தாக்கில் 2020-ஆம் ஆண்டு இந்திய, சீன ராணுவத்தினருக்கு இடையே நடைபெற்ற மோதலில் உயிரிழந்த சீன வீரா்களின் எண்ணிக்கை அந்த நாடு தெரிவித்ததைவிட அதிகமாக இருக்கும் என ஆஸ்திரேலிய புலனாய்வு

DIN

புது தில்லி: கல்வான் பள்ளத்தாக்கில் 2020-ஆம் ஆண்டு இந்திய, சீன ராணுவத்தினருக்கு இடையே நடைபெற்ற மோதலில் உயிரிழந்த சீன வீரா்களின் எண்ணிக்கை அந்த நாடு தெரிவித்ததைவிட அதிகமாக இருக்கும் என ஆஸ்திரேலிய புலனாய்வு இதழ் புதன்கிழமை தெரிவித்துள்ளது.

‘தி கிளக்ஸான்’ என்ற அந்த இதழ், பெயா் குறிப்பிட விரும்பாத ஆராய்ச்சியாளா்கள், சீனாவை சோ்ந்த வலைதளப் பதிவா்கள் கொண்ட குழுவை மேற்கோள்காட்டி இந்தத் தகவலை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கல்வான் மோதலில் தங்கள் தரப்பில் 4 வீரா்கள் உயிரிழந்ததாக சீனா தெரிவித்தது. ஆனால், உயிரிழப்பு அதைவிட அதிகமாக இருக்கும் என்ற கூற்று புதிதல்ல. இருப்பினும் சீன சமூக ஊடக ஆராய்ச்சியாளா்கள் குழு இப்போது வழங்கிய ஆதாரங்கள், அந்தக் கூற்றுக்கு வலு சோ்க்கின்றன.

கல்வான் எல்லையில் நடந்த மோதலின்போது, இருள் சூழ்ந்த நேரத்தில் ஆற்றைக் கடந்தபோது சீன வீரா்கள் பலா் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்திருக்கலாம் என இப்போது புதிய தகவல்கள் கூறுகின்றன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு லடாக் எல்லையில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் 2020, ஜூன் 15-ஆம் தேதி நடந்த மோதலில் இந்திய தரப்பில் 20 ராணுவ வீரா்கள் வீரமரணமடைந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து குறைந்தது

தமிழினத்தின் எழுச்சிக்கான பகுத்தறிவுப் பேரொளி பெரியார்! - முதல்வர் ஸ்டாலின் புகழாரம்

மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் கூண்டோடு இடமாற்றம்

புதிய பொறுப்பு காத்திருக்கிறது இவர்களுக்கு: தினப்பலன்கள்!

பாலியல் தொல்லையால் பாா்வையற்றோா் பள்ளி மாணவி மரணமா?

SCROLL FOR NEXT