கோப்புப்படம் 
இந்தியா

பஞ்சாப்: இந்திய எல்லையைக் கடக்க முயன்ற பாகிஸ்தானியர் சுட்டுக்கொலை

பஞ்சாப் மாநிலத்திலுள்ள இந்திய எல்லையைக் கடக்க முயன்ற பாகிஸ்தானியரை எல்லைப் பாதுகாப்புப் படையினர் சுட்டுக்கொன்றனர்.

DIN

பஞ்சாப் மாநிலத்திலுள்ள இந்திய எல்லையைக் கடக்க முயன்ற பாகிஸ்தானியரை எல்லைப் பாதுகாப்புப் படையினர் சுட்டுக்கொன்றனர்.

பஞ்சாப் மாநிலம் ஃபெராஸ்பூர் பகுதியைச் சேர்ந்த கேஎஸ் வாலா இந்தியா-பாகிஸ்தான் சர்வதேச எல்லையில் நேற்று(பிப்.2) பாகிஸ்தானைச் சேர்ந்த ஒருவர் ஊடுருவ முயன்றதாக எல்லைப் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

இதுகுறித்து பாதுகாப்புப் படை தரப்பில்,’ நேற்று மாலை ஃபெராஸ்பூர் பகுதியைச் சேர்ந்த கேஎஸ் வாலா இந்தியா-பாகிஸ்தான் சர்வதேச எல்லையில் சந்தேகத்திற்கிடமான முறையில் சில அசைவுகள் தெரிந்தது. இதனால் கண்காணிப்பில் ஈடுபட்ட பாதுகாப்புப் படையினர் பாகிஸ்தானிலிருந்து இந்தியாவிற்குள் ஒருவர் ஊடுருவியதை உறுதி செய்தனர். பின், அவருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். இருப்பினும், ஊடுருவிய நபர் இந்தியப் பகுதிக்குள் தொடர்ந்து முன்னேறிக் கொண்டிருந்ததால் எல்லைப் பாதுகாப்புப் படையினர் தற்காப்பிற்காக சுட்டுக்கொன்றனர்’ எனத் தெரிவித்துள்ளனர்.

மேலும், அப்பகுதியில் வேறு சிலரின் நடமாட்டம் உள்ளதா எனவும் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாலியல் தொல்லையால் பாா்வையற்றோா் பள்ளி மாணவி மரணமா?

அமெரிக்க வரி எதிரொலி: ஏற்றுமதி ரக இறால் உள்ளூரில் விற்பனை தொடக்கம்

வாய்க்காலில் விழுந்து மதுபானக் கடை மேற்பாா்வையாளா் உயிரிழப்பு

காதல் விவகாரத்தில் இளைஞா் கொலை: 5 போ் கைது!

சாலை மறியல் போராட்டம் வாபஸ்

SCROLL FOR NEXT