நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு தேவை: மாநிலங்களவையில் திமுக எம்.பி. பேச்சு
நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கும் மசோதாவுக்கு ஒப்புதல் தேவை என்று மாநிலங்களவையில் திமுக எம்.பி. ஆர்.எஸ். பாரதி பேசியுள்ளார்.
இந்தியாநீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு தேவை: மாநிலங்களவையில் திமுக எம்.பி. பேச்சு
நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கும் மசோதாவுக்கு ஒப்புதல் தேவை என்று மாநிலங்களவையில் திமுக எம்.பி. ஆர்.எஸ். பாரதி பேசியுள்ளார்.
நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கும் மசோதாவுக்கு ஒப்புதல் தேவை என்று மாநிலங்களவையில் திமுக எம்.பி. ஆர்.எஸ். பாரதி பேசியுள்ளார்.
மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31 ஆம் தேதி குடியரசுத் தலைவர் உரையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. பிப்ரவரி 1 ஆம் தேதி மக்களவையில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து குடியரசுத் தலைவர் உரை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.
இன்று மாநிலங்களவையில் பேசிய திமுக எம்.பி. ஆர்.எஸ். பாரதி, 'மத்திய அரசு, கரோனா காலத்தில் மக்களைக் காக்கத் தவறிவிட்டது.தில்லியில் இருந்து புலம்பெயர் தொழிலாளர்கள் பல கிமீ தூரம் வரை நடந்தார்கள். ஒரு பெண் தனது குழந்தையுடன் உணவின்றி பல கிலோமீட்டர் தூரம் நடந்து செல்லும் காட்சியைப் பார்த்திருப்போம். அப்போது மத்திய அரசு என்ன செய்து கொண்டிருந்தது?
முதல் கரோனா அலையில் இருந்து மத்திய அரசு பாடம் கற்கவில்லை. அடுத்தடுத்த அலைகளிலும் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மாநில அளவில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளிப்பதில்லை. நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கும் மசோதா தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநர் ஒப்புதலுக்கு காத்திருக்கிறது.
நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு தேவை; நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கும் மசோதாவுக்கு ஒப்புதல் தேவை' என்று பேசினார்.