பள்ளிகளைத் திறக்க அனுமதிக்காவிட்டால்.. மிரட்டும் உ.பி. தனியார் பள்ளிகள்
உத்தரப்பிரதேசத்தில் உடனடியாக பள்ளிகளைத் திறக்க அனுமதிக்காவிட்டால், ஆன்லைன் வகுப்புகளை நிறுத்தப் போவதாக அரசு உதவி பெறாத தனியார் பள்ளிகள் கழகம் மிரட்டல் விடுத்துள்ளது.
லக்னௌ: உத்தரப்பிரதேசத்தில் உடனடியாக பள்ளிகளைத் திறக்க அனுமதிக்காவிட்டால், ஆன்லைன் வகுப்புகளை நிறுத்தப் போவதாக அரசு உதவி பெறாத தனியார் பள்ளிகள் கழகம் மிரட்டல் விடுத்துள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் உள்ள அரசு உதவி பெறாத 250 தனியார் பள்ளிகளின் சங்கம் சார்பில், மாநில அரசுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதில், உடனடியாக பள்ளிகளைத் திறக்க உத்தரவிடாவிட்டால், ஆன்லைன் வகுப்புகளை நிறுத்தப்போவதாகவும், பேரவைத் தேர்தலில் ஒத்துழைப்பு வழங்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
பிப்ரவரி 6ஆம் தேதி வரை காத்திருப்போம். அதற்குள் பள்ளிகள் திறப்பு குறித்த அறிவிப்பு வெளியாகாவிட்டால், அதன்பிறகு ஆன்லைன் வகுப்புகள் நிறுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.