முகப்பு
இந்தியா

தில்லியில் பிப்.7 முதல் பள்ளி, கல்லூரிகள் திறப்பு

கரோனா பரவல் காரணமாக மூடப்பட்டிருந்த பள்ளி மற்றும் கல்லூரிகளை பிப்ரவரி 7ஆம் தேதி திறக்க தில்லி பேரிடர் மேலாண்மைக் கழகம் அனுமதி வழங்கியுள்ளது.

Updated On : 4 பிப்ரவரி, 2022 at 1:12 PM
தில்லியில் பிப்.7 முதல் பள்ளி, கல்லூரிகள் திறப்பு
பகிர்:


புது தில்லி : கரோனா பரவல் காரணமாக மூடப்பட்டிருந்த பள்ளி மற்றும் கல்லூரிகளை பிப்ரவரி 7ஆம் தேதி திறக்க தில்லி பேரிடர் மேலாண்மைக் கழகம் அனுமதி வழங்கியுள்ளது.

புது தில்லியில் இன்று தில்லி பேரிடர் மேலாண்மைக் கழகத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் இது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மேலும், முதல்கட்டமாக 9 - 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகளைத் திறக்கவும், மற்ற வகுப்புகளுக்கு ஆன்லைன் முறையிலேயே வகுப்புகளைத் தொடரவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

Advertisement

மேலும், தில்லியில் கடைப்பிடிக்கப்பட்டு வரும் இரவு நேர ஊரடங்கு உத்தரவும் ரத்து செய்யப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது.

அனைத்து ஆசிரியர்களும் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளுமாறும், கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத ஆசிரியர்கள் பள்ளிக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அலுவலகங்கள் 100 சதவீத பணியாளர்களுடன் செயல்படவும், உடற்பயிற்சிக் கூடங்கள், அழகுநிலையங்கள் செயல்படவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.