இந்தியா

மணிப்பூர் பேரவைத் தலைவர் உள்பட 4 பேர் வேட்புமனு தாக்கல்

DIN

மணிப்பூர் சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பேரவைத் தலைவர் உள்பட 4 பேர் இன்று வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். 

மணிப்பூர் சட்டப்பேரவைத் தலைவர் யும்னம்கெம்சந்த் சிங் 13-சிங்ஜமேய் சட்டமன்றத் தொகுதியில் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். 

முதல்கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கி மூன்றாம் நாளான நேற்று முன்னாள் அமைச்சர் கரம் ஷியாம் உள்பட நான்கு வேட்பாளர்கள் இம்பால் மேற்கு மாவட்டத்தில் தங்கள் ஆவணங்களைச் சமர்ப்பித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

முன்னாள் அமைச்சர் கரம் ஷியாம் 20-லங்தபால் சட்டமன்றத் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார். அதேநேரத்தில் தேசிய மக்கள் கட்சி வேட்பாளர் கொந்தௌஜம் ஷரத் சிங் 18-கோந்தௌஜம் தொகுதியில் தனுது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். 

வியாழன் வரை மொத்தம் 6 வேட்பாளர்கள் தங்கள் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர். தேசிய மக்கள் கட்சியில் 3 பேரும், பாஜகவில் 2 பேரும், ஜனதா தளம் சார்பில் ஒருவரும் வேட்பு மனுவைத் தாக்கல் செய்துள்ளனர். 

சட்டப் பேரவைத் தேர்தல் பிப்ரவரி 27 மற்றும் மார்ச் 3 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறுகிறது. வேட்புமனு தாக்கல் செய்ய பிப்ரவரி 8-ம் தேதி கடைசி நாளாகவும், வேட்புமனுவை வாபஸ் பெற பிப்ரவரி 11-ம் தேதியும் கடைசி நாளாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் நுழைவுத் தோ்வு: ஒருங்கிணைந்த வேலூரில் 6,787 போ் எழுதினா் விண்ணப்பித்தவா்களில் 255 போ் எழுதவில்லை

மரக்கன்றுகள் நடல்

கோடை சாகுபடிக்கு போதிய மின்சாரம் வழங்க வலியுறுத்தல்

தென்னை விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு: ஜி.கே.வாசன் கோரிக்கை

ராஜஸ்தானில் ‘நீட்’ தோ்வில் ஆள்மாறாட்டம்: எம்பிபிஎஸ் மாணவா், 5 போ் கைது

SCROLL FOR NEXT