முகப்பு
இந்தியா

கோவாவில் ராகுல் காந்தி வீடு வீடாகச் சென்று தேர்தல் பிரசாரம்

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கோவாவில் இன்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:19 AM
பகிர்:

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கோவாவில் இன்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். 

உத்தர பிரதேசம், உத்தரகண்ட், பஞ்சாப், மணிப்பூா், கோவா ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தோ்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், கோவாவில் 40 தொகுதிகளுக்கான பேரவைத் தேர்தல் வருகிற பிப்ரவரி 14 ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. 

பாஜக ஆளும் மாநிலத்தில் ஆட்சியைப் பிடிக்க காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் முயற்சித்து வருகின்றன. 

இந்நிலையில், காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, இன்று(பிப். 4) கோவா சென்றுள்ளார். அங்கு இன்று காணொலி பிரசாரத்தில் உரையாற்றும் அவர், வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரிக்கும் பணியிலும் ஈடுபட்டு வருகிறார். 

அப்போது அங்குள்ள மக்களின் வீட்டிற்குச் சென்று அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். மேலும் அவர்களுடன் கலந்துரையாடி குறைகளைக் கேட்டறிந்தார்.

முழு கட்டுரையைப் படிக்க →