கோப்புப்படம் 
இந்தியா

கர்நாடகத்தில் திரையரங்குகள் 100 சதவிகித இருக்கைகளுடன் இயங்க அனுமதி

கரோனா பரவல் குறைந்ததைத் தொடர்ந்து கர்நாடகத்தில் விதிக்கப்பட்டிருந்த கரோனா கட்டுப்பாடுகளை அம்மாநில அரசு தளர்த்தியுள்ளது.

DIN

கரோனா பரவல் குறைந்ததைத் தொடர்ந்து கர்நாடகத்தில் விதிக்கப்பட்டிருந்த கரோனா கட்டுப்பாடுகளை அம்மாநில அரசு தளர்த்தியுள்ளது.

கர்நாடகத்தில் கரோனா தொற்று பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. அதனைத் தொடர்ந்து ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகின்றன. அதன் ஒருபகுதியாக கர்நாடகத்தில் மக்கள் கூடும் பொது இடங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த கரோனா கட்டுப்பாடுகளைத் தளர்த்தி மாநில அரசு வெள்ளிக்கிழமை அறிவிப்பு வெளியிட்டது.

கர்நாடகத்தில் ஏற்கெனவே இரவு நேர ஊரடங்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், ஜனவரி 31ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன.

தற்போது உடற்பயிற்சிக் கூடங்கள், திரையரங்குகள், நீச்சல் குளங்கள், யோகா பயிற்சி மையங்கள் போன்றவற்றில் 100 சதவிகித வாடிக்கையாளர்களுடன் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

அதேசமயம் இரு தவணை கரோனா தடுப்பூசி செலுத்தியவர்களை மட்டுமே அனுமதிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. முகக்கவசம் அணிதல், தனிமனித இடைவெளிகளைப் பின்பற்றுதல், கிருமி நாசினிகளை பயன்படுத்துதல் உள்ளிட்ட கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரயில் பயணிகளை ஏமாற்றி பணம் பறிப்பு: போலி டிக்கெட் பரிசோதகா் கைது

ஹாத்வே நிகர லாபம் 46% சரிவு!

இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 6.6% ஆக உயர்த்தி கணிப்பு: ஐஎம்எஃப்

குடும்பத்தாரின் அன்பை சோதிக்க இறந்தது போல நடித்த விமானப் படை வீரர்!

சிங்கப்பூரிடம் தோல்வி! ஏஎஃப்சி ஆசிய கோப்பைக்கு தகுதி பெறும் வாய்ப்பை நழுவவிட்ட இந்தியா!

SCROLL FOR NEXT