இந்தியா

லதா மங்கேஷ்கரின் உடல்நிலையில் பின்னடைவு

PTI

மும்பை: புகழ்பெற்ற பின்னணி பாடகி லதா மங்கேஷ்கரின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டிருப்பதாகவும் அவருக்கு மீண்டும் வென்டிலேட்டர் பொருத்தப்பட்டிருப்பதாகவும் சிகிச்சையளித்து வரும் மருத்துவர் சனிக்கிழமை தெரிவித்துள்ளார்.

92 வயதாகும் லதா மங்கேஷ்கர், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு லேசான அறிகுறிகளுடன் மும்பையில் உள்ள மருத்துவமனையில் கடந்த ஜனவரி 8ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சைப் பிரிவில் தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

"அவரது உடல்நிலை பின்னடைவை சந்தித்துள்ளது. தொடர்ந்து அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளார், மீண்டும் அவருக்கு வென்டிலேட்டர் பொருத்தப்பட்டுள்ளது" என்று அவருக்கு சிகிச்சை அளித்து வரும் டாக்டர் பிரதித் சம்தானி சனிக்கிழமை தெரிவித்துள்ளார்.

லதா மங்கேஷ்கருக்கு லேசான அறிகுறியுடன் கரோனா தாக்கம் கண்டறியப்பட்டதால் சிகிச்சைக்காக மும்பையில் உள்ள தனியாா் மருத்துவமனையில், தீவிர சிகிச்சை பிரிவில் கடந்த ஜனவரி 8-ஆம் தேதி அனுமதிக்கப்பட்டாா். அவருக்கு தொடா்ந்து சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த வாரம் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், சோதனை அடிப்படையில் வென்டிலேட்டா் அகற்றப்பட்டதாகவும் குடும்பத்தினா் தெரிவித்திருந்தனர். மேலும், அவர் கரோனா மற்றும் நிமோனியா தொற்றிலிருந்தும் குணமடைந்துவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், லதா மங்கேஷ்கரின் உடல்நிலையில் இன்று பின்னடைவு ஏற்பட்டிருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவை தேர்தல்: ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்குமிடையேயான போர் -யோகி ஆதித்யநாத்

ஸ்காட்லாந்து அணி சீருடையில் கர்நாடகத்தின் ‘நந்தினி’ பால் நிறுவன குறியீடு

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை: தமிழ்நாடு, கேரள அரசுகளுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்

அதிமுகவில் இணைகிறாரா ஓபிஎஸ் ? - ஆர்.பி.உதயகுமார் விளக்கம்

பிறந்தநாள் வாழ்த்துகள் மடோனா செபாஸ்டியன்!

SCROLL FOR NEXT