பழம்பெரும் திரைப்பட பாடகி லதா மங்கேஷ்கரின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட லதா மங்கேஷ்கா் (92) கடந்த ஜனவரி 8-ஆம் தேதி மும்பையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
அவரின் உடல்நிலையில் லேசான முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாகவும், தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளபோதிலும் செயற்கை சுவாசக் கருவியின் உதவியில்லாமல் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் கடந்த ஜனவரி 29-ஆம் தேதி மருத்துவா்கள் தெரிவித்திருந்தனா்.
இந்நிலையில், அவருக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவா் சனிக்கிழமை கூறுகையில், ‘‘லதா மங்கேஷ்கரின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அவா் தொடா்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து வருகிறாா். அவருக்கு மீண்டும் செயற்கை சுவாசக் கருவி உதவியுடன் சிகிச்சை அளிக்கப்படுகிறது’’ என்று தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.