இந்தியா

ஜூனியர்களை ராகிங் செய்த ஆந்திர கல்லூரி மாணவர்கள் 18 பேர் இடைநீக்கம்

DIN

தெலுங்கு மாநிலங்களில் உள்ள சில கல்வி நிறுவனங்களில் மாணவர்களை ராகிங் செய்யும் அச்சுறுத்தல் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. அந்தவகையில் ஆந்திர மாநிலம், அனந்தபூரில் உள்ள ஜேஎன்டியூ பல்கலையில் ஜூனியர்களை ராகிங் செய்ததற்காக 18 மாணவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 

ஜவஹர்லால் நேரு தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின், அனந்தபூர் பொறியியல் கல்லூரி மாணவர்கள் சிலர் புதிதாக வந்த மாணவர்களை வலுக்கட்டாயமாக தங்கள் விடுதிக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு ஜூனியர் மாணவர்களை அரை நிர்வாணமாக நிற்கவும், மூத்த மாணவர்களின் கட்டளைகளைப் பின்பற்றவும் கட்டாயப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. 

இச்சம்பவம் வெள்ளிக்கிழமை இரவு நடந்துள்ளது. முதலாம் ஆண்டு மாணவர் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில், ராகிங் குறித்து கல்லூரி அதிகாரிகளுக்குத் தெரிய வந்தது. கல்லூரி கவுன்சில் இந்த சம்பவத்திற்கு நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில், இரண்டாம் ஆண்டு மாணவர்கள் 18 பேரைக் கல்லூரி மற்றும் விடுதியிலிருந்து இடைநீக்கம் செய்தது. 

அடுத்த நடவடிக்கையாகப் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பிற மாணவர்களிடமிருந்து உண்மைகளைக் கண்டறிய கவுன்சில் விரிவான விசாரணையைத் தொடங்கியுள்ளது. 

இதேபோன்று, தெலங்கானா மாநிலம் சூர்யா பேட்டையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் கடந்த மாதம் ஜூனியர் மாணவியை ராகிங் செய்த 6 மாணவர்கள் ஓராண்டுக்கு இடைநீக்கம் செய்யப்பட்டனர். கடந்த ஒரு மாதத்தில் தெலுங்கு மாநிலத்தில் நடக்கும் இரண்டாவது ராகிங் சம்பவம் இதுவாகும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

8 வாக்குச் சாவடிகளில் மறுதோ்தல் நடத்த வலியுறுத்தி நீதிமன்றத்தில் வழக்கு

குடியாத்தம் கெங்கையம்மன் திருவிழா ஆலோசனைக் கூட்டம்

திருப்பத்தூரில் வெப்ப அலைகள் குறித்த ஆலோசனை கூட்டம்

பந்துவீச்சில் அசத்திய பெங்களூரு; 147 ரன்களுக்கு ஆட்டமிழந்த குஜராத் டைட்டன்ஸ்!

ஐஜிஐ மெட்ரோ நிலையம், பள்ளியில் பாதுகாப்பு ஒத்திகைப் பயிற்சி

SCROLL FOR NEXT