இந்தியா

ஐஎஸ்சிஇ 10, 12ஆம் வகுப்பு முதல் பருவத்தேர்வு முடிவுகள் வெளியீடு

PTI


புது தில்லி: ஐஎஸ்சிஇ பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான முதல் பருவத் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன.

கடந்த ஆண்டு நவம்பர் 29ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 16ஆம் தேதி வரை 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முதல் பருவத் தேர்வு நடைபெற்றது.

இந்த நிலையில், ஐஎஸ்சிஇ பாடத்திட்டத்தின் கீழ் பயின்று வரும் 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான முதல் பருவத் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தேர்வு முடிவுகள் இணையதளத்தில் மாணவர்கள் அறிந்து கொள்ளும் முறையிலும்ட, மாணவர்களுக்கு குறுஞ்செய்தி மூலமாகவும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

கடந்த கல்வியாண்டில் கரோனா பேரிடர் காரணமாக 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்த முடியாமல் போனதால், இந்த கல்வியாண்டில் இரண்டு பருவங்களாகப் பிரித்து இரண்டு பருவத்தேர்வுகள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு, நவம்பர் - டிசம்பர் மாதத்தில் முதல் பருவத் தேர்வு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

இதே முறையில் முதல் பருவத் தேர்வை நடத்திய சிபிஎஸ்இ நிர்வாகம், இதுவரை தேர்வு முடிவுகளை வெளியிடவில்லை. எப்போது வெளியாகும் என்பது குறித்த தகவல்களும் கிடைக்கப்பெறவில்லை.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வரலாற்று நிகழ்வு: திருப்பைஞ்ஞீலியில் அப்பர் கட்டமுது விழா

2 நாள் பயணமாக மேற்கு வங்கம் செல்கிறார் பிரதமர் மோடி!

இஸ்ரேல் உறவு துண்டிப்பு: நெதன்யாகு மீது கொலம்பிய அதிபர் காட்டம்!

தொலையாத கனவுகள்.. லாபதா லேடீஸ் - திரை விமர்சனம்!

400 பெண்களைச் சீரழித்த பிரஜ்வலுக்கு வாக்குக் கேட்டதற்காக மோடி மன்னிப்புக் கேட்க வேண்டும்: ராகுல் காந்தி

SCROLL FOR NEXT