இந்தியா

'சுமுக முடிவு ஏற்பட்டால் மட்டுமே மேக்கேதாட்டு அணைக்கு அனுமதி'

தமிழகம், கர்நாடக மாநிலங்களுக்கிடையே ஒருமித்த கருத்து ஏற்பட்டால் மட்டுமே மேக்கேதாட்டு அணை கட்ட அனுமதி வழங்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

DIN

தமிழகம், கர்நாடக மாநிலங்களுக்கிடையே ஒருமித்த கருத்து ஏற்பட்டால் மட்டுமே மேக்கேதாட்டு அணை கட்ட அனுமதி வழங்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மேக்கேதாட்டு அணை கட்ட எப்போது அனுமதி வழங்கப்படும் என்று மக்களவையில் கர்நாடக மாநில உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு மத்திய அரசு இந்த பதிலை அளித்துள்ளது. 

தமிழக அரசின் அனுமதியில்லை என்றாலும் மேக்கேதாட்டுப் பகுதியில் அணை கட்டியே தீருவோம் என்று கர்நாடக அரசு சமீபகாலமாக தெரிவித்து வருகிறது.

இந்நிலையில், மக்களவையில் கேள்வி நேரத்தின்போது, மேக்கேதாட்டு பகுதியில் அணை எப்போது கட்ட அனுமதி வழங்கப்படும் என்று கர்நாடக எம்.பி. இன்று (பிப்.7) கேள்வி எழுப்பினார். 

இதற்கு பதிலளித்த மத்திய அமைச்சர் அஷ்வினிகுமார் செளபே, மத்திய அரசு அணை கட்டும் திட்டத்தை பார்வையிட மட்டுமே செய்துள்ளதே தவிர அணை கட்ட இன்னும் அனுமதி வழங்கவில்லை.

இரு மாநிலங்களுக்கு (தமிழகம், கர்நாடகம்) இடையே சுமுக முடிவு ஏற்பட்டால் மட்டுமே மேக்கேதாட்டு அணை கட்ட அனுமதி வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அக். 16 - 18ல் வடகிழக்கு பருவமழை தொடங்கும்: இந்திய வானிலை ஆய்வு மையம்

ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 5000 ரன்களைக் கடந்து ஸ்மிருதி மந்தனா சாதனை!

ரயில்வேயில் விளையாட்டு வீரர்களுக்கு வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

600 கோல்களை நிறைவுசெய்த லூயிஸ் சௌரஸ்..! முதல் உருகுவே வீரராக சாதனை!

இருமல் மருந்து விவகாரம்: முதல்வருக்கு பொறுப்புள்ளது - அண்ணாமலை

SCROLL FOR NEXT