முகப்பு
இந்தியா

அசாமில் பிப். 15 முதல் ஊரடங்கு இல்லை: முதல்வர் அறிவிப்பு

அசாம் மாநிலத்தில் வருகிற பிப்ரவரி 15 முதல் ஊரடங்கு இல்லை என அம்மாநில முதவளர்  ஹிமந்த பிஸ்வ சர்மா தெரிவித்துள்ளார். 

Updated On : 7 பிப்ரவரி, 2022 at 11:33 AM
பகிர்:

அசாம் மாநிலத்தில் வருகிற பிப்ரவரி 15 முதல் ஊரடங்கு இல்லை என அம்மாநில முதவளர்  ஹிமந்த பிஸ்வ சர்மா தெரிவித்துள்ளார். 

நாட்டில் ஒமைக்ரான் பரவல் குறைந்து வருவதனையடுத்து படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. 

இந்நிலையில் அசாம் மாநிலத்தில் கரோனா பாதிப்பு குறைந்ததையடுத்து பிப்ரவரி 15 முதல் ஊரடங்கு வாபஸ் பெறப்படுபடுவதாக மாநில முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா இன்று செய்தியாளர்கள் சந்திப்பின்போது தெரிவித்துள்ளார். 

Advertisement

மேலும், பிப். 15 முதல் கரோனா நடவடிக்கைகள் அனைத்தும் திரும்பப் பெறப்படுவதாகக் கூறிய அவர், 10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் அனைத்து மாணவர்களும் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார். 

மாநிலத்தில் உள்ள மற்ற நகராட்சி வாரியத் தேர்தல்களுடன், குவஹாத்தி முனிசிபல் கார்ப்பரேஷன் மற்றும் கர்பி அங்லாங் தன்னாட்சி கவுன்சில் தேர்தல்கள் வருகிற ஏப்ரல் மாதம் நடைபெறும் என்றும் தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.