இந்தியா

ஆந்திர சாலை விபத்தில் உயிரிழந்தோருக்கு தலா ரூ. 2 லட்சம் இழப்பீடு: பிரதமர் அறிவிப்பு

DIN

ஆந்திரத்தில் சாலை விபத்தில் பலியானவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.  

ஆந்திர மாநிலத்தின் அனந்தபுரம் மாவட்டம் உருவகொண்டா அருகே நேற்று கார் மீது லாரி மோதியதில் காரில் பயணித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 குழந்தைகள் உள்பட 9 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். 

இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

இந்நிலையில் விபத்து குறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், 'ஆந்திர மாநிலம் அனந்தபுரம் மாவட்டத்தில் நடந்த கோர விபத்தில் 9 பேர் உயிரிழந்தது வேதனை அளிக்கிறது. அவர்களை இழந்து வாடும் குடும்பங்களுக்கு அனுதாபங்கள். பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 2 லட்சம் வழங்கப்படும்' என்று பதிவிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விண்ணப்பித்துவிட்டீர்களா? மத்திய அரசில் 3712 காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

கடலில் ராட்சத அலைகள் எழும் -கடற்கரை செல்லும் மக்களுக்கு எச்சரிக்கை

‘ஒரு வார்த்தை மாறிடுச்சு..’ : கங்கனாவின் பேச்சு குழப்பமான கதை!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

காயம் காரணமாக தாயகம் திரும்பும் மதீஷா பதிரானா!

SCROLL FOR NEXT