சரண்ஜித் சிங் சன்னி 
இந்தியா

ஹிமாச்சல்: நைனா தேவி கோயிலில் சரண்ஜித் சிங் சன்னி வழிபாடு

பஞ்சாப் காங்கிரஸ் முதல்வர் வேட்பாளர் சரண்ஜித் சிங் சன்னி திங்கள்கிழமை ஹிமாச்சலப் பிரதேசத்தில் உள்ள ஸ்ரீ நைனா தேவி கோயிலுக்குச் சென்று வழிபாடு செய்தார்.

DIN

பிலாஸ்பூர் (ஹிமாச்சல பிரதேசம்): பஞ்சாப் காங்கிரஸ் முதல்வர் வேட்பாளர் சரண்ஜித் சிங் சன்னி திங்கள்கிழமை ஹிமாச்சலப் பிரதேசத்தில் உள்ள ஸ்ரீ நைனா தேவி கோயிலுக்குச் சென்று வழிபாடு செய்தார்.

நைனா தேவியின் வழிபாட்டிற்கு பின்னர் சரண்ஜித் சிங் சன்னி கூறியதாவது: 
அன்னையின் ஆசியுடன் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டேன், முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ஒரு நாள் பின்னர் அன்னை தரிசனத்திற்காக இங்கு வந்தேன், நைனா தேவியின் ஆசிர்வாதம் பெற்று வரும் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற பிரார்த்தனை செய்தேன் என்று சனி கூறினார்.  

மேலும் பஞ்சாபில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமைந்த பிறகு, ஸ்ரீ ஆனந்த்பூர் சாஹிப் மற்றும் ஸ்ரீ நைனா தேவி கோயில் இரண்டும் ரோப்வே மூலம் இணைக்கப்படும் என்று சன்னி கூறினார்.

பஞ்சாப் மாநிலத்தில் பிப்ரவரி 20-ஆம் தேதி வாக்குப் பதிவும், வாக்கு எண்ணிக்கை மார்ச் 10-ஆம் தேதியும் நடைபெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பொருநை அருங்காட்சியகத்தை பாா்வையிட டிச.23 முதல் அனுமதி!

3-0: ஆஷஸ் தொடரை தக்கவைத்தது ஆஸி.!

விண்வெளி நாயகன் எலான் மஸ்க்! 700 பில்லியன் டாலர் மதிப்புடன் முதலிடம்!

வரலாற்றைப் படிப்பவர்கள்தான் வரலாறு படைக்க முடியும்: முதல்வர் ஸ்டாலின்

சென்னையில் 2-வது நாளாக இன்று வாக்காளர் சிறப்பு முகாம்!

SCROLL FOR NEXT