முகப்பு
இந்தியா

கரோனா: அசாமில் புதிதாக 315 பேருக்கு தொற்று, 6 பலி

அசாமில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 315 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, ஆறு தொற்று பாதிப்புக்கு இறந்துள்ளனர் என்று மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

Updated On : 10 பிப்ரவரி, 2022 at 9:50 AM
பகிர்:

திஸ்பூர்: அசாமில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 315 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, ஆறு தொற்று பாதிப்புக்கு இறந்துள்ளனர் என்று மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

இன்றைய கரோனா பாதிப்பு குறித்து மாநில சுகாதாரத் துறை கூறியுள்ளதாவது:

கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 7,145 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 6 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த உயிரிழப்பு 6,585. கடந்த 24 மணி நேரத்தில் 1,539 பேர் கரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். மொத்தமாக குணமடைந்தோர் எண்ணிக்கை 7,09,716 ஆக அதிகரித்துள்ளது.

Advertisement

மாநிலத்தில் தற்போது கரோனா பாதித்து சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 5,035 ஆகவும், பாதிப்பு விகிதம் 0.98 சதவிகிதமாகவும் உள்ளது.

மாநிலம் முழுவதும் இதுவரை 2,81,13,312 கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 32,126 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.