முகப்பு
இந்தியா

ஹிஜாப் விவகாரம்: பள்ளிகள் திறப்பை அறிவித்த கர்நாடக முதல்வர்

கர்நாடகத்தில் பிப்ரவரி 14ஆம் தேதி முதல் 9 மற்றும் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.

Updated On : 10 பிப்ரவரி, 2022 at 8:57 PM
கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை
பகிர்:

கர்நாடகத்தில் பிப்ரவரி 14ஆம் தேதி முதல் 9 மற்றும் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.

கர்நாடக மாநிலம் குந்தாப்பூர் அரசு பி.யூ. கல்லூரியில் இஸ்லாமியப் பெண்கள் ஹிஜாப் அணிந்து வருவதற்கு தடை விதித்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கல்வி நிலையங்களில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிய எதிர்ப்பு தெரிவித்து பாஜக மாணவர் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  இந்த விவகாரத்தில் இஸ்லாமிய மாணவிகள் தொடர்ந்த நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.

ஹிஜாப் விவகாரத்தில் தொடர்ந்த பதற்றமான சூழல் காரணமாக கடந்த பிப்ரவரி 8ஆம் தேதி முதல் 3 நாள்களுக்கு கர்நாடகத்தில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. 

இந்நிலையில் இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை பேசிய மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை, “பிப்ரவரி 14ஆ தேதி முதல் 10ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும்” என்றார்.

மேலும், “இரண்டாம் கட்டமாக 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு கல்வி நிலையங்களைத் திறப்பது குறித்து பின்னர் முடிவெடுக்கப்படும்” எனத் தெரிவித்தார். 

தொடர்ந்து பேசிய அவர், “கல்வி நிலையங்களில் அமைதியான சூழல் நிலவ அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்” எனக் கேட்டுக் கொண்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.