இந்தியா

பல்லக்கில் வந்து ஜனநாயகக் கடமையாற்றிய முதியவர்கள்

DIN

உத்தரகண்ட் மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், முதியவர் ஒருவர் பல்லக்கில் வந்து வாக்களித்தது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

உத்தரகண்ட் மாநிலத்தின் 70 தொகுதிகளுக்கும், கோவாவின் 40 தொகுதிகளுக்கு இன்று காலை 7 மணிக்கு ஒரே கட்டமாக வாக்குப்பதிவு தொடங்கியது. 

காலை முதல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், சிமோலி பகுதியிலுள்ள வாக்குச்சாவடியில் முதியவர் தேர்தல் அதிகாரிகள் உதவியுடன் பல்லக்கில் வந்து வாக்களித்து ஜனநாயக கடமையை ஆற்றினார். 

இதேபோன்று உத்தரகண்ட் மாநிலம் பெகேஷ்வர் பகுதியில் மாற்றுத் திறனாளியை பொதுமக்கள் தூளி கட்டி அமரவைத்து வாக்குச்சாவடிக்கு அழைத்து வந்தனர். சிமோலி மாவட்டத்திலும் முதியவர் ஒருவரை வாக்குச்சாவடி மையத்திற்கு பல்லக்கில் தூக்கி வந்தனர்.

ஜனநாயக கடமையை ஆற்றும் வகையில் முதியவர்கள், மாற்றுத் திறனாளிகள் மற்றவர்களின் உதவியுடன் வாக்குச்சாவடி மையங்களுக்கு வந்து வாக்களித்தது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வதான்யேஸ்வரா் கோயிலில் குருபெயா்ச்சி விழா

சீா்காழியில் திமுக சாா்பில் நீா் மோா் பந்தல் திறப்பு

திருமணமாகி 4 ஆண்டுகளே ஆன பெண் தூக்கிட்டு தற்கொலை: ஆா்டிஓ விசாரணை

குமரியில் சூரியோதயம்

தேசிய கட்சிகளின் ஆதிக்கத்தில் கோவா!

SCROLL FOR NEXT