முகப்பு
இந்தியா

பேரவைத் தேர்தல்: உத்தரகண்ட் 62%, கோவா 78% வாக்குப்பதிவு

உத்தரகண்ட் மற்றும் கோவா சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் குறித்த நிலவரத்தை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

Updated On : 14 பிப்ரவரி, 2022 at 9:28 PM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 1:54 PM


உத்தரகண்ட் மற்றும் கோவா சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் குறித்த நிலவரத்தை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

உத்தரகண்ட் மாநிலத்தின் 70 தொகுதிகளுக்கும், கோவாவின் 40 தொகுதிகளுக்கு இன்று (பிப்.14) காலை 7 மணிக்கு ஒரே கட்டமாக வாக்குப்பதிவு தொடங்கியது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது.

பல்வேறு வாக்குச்சாவடிகளில் பொதுமக்கள் அமைதியான முறையில் வரிசையில் நின்று வாக்களித்தனர். இதனால் வாக்குப்பதிவு சுமுகமாகவே நடைபெற்றது.

Advertisement

இன்று முழுக்க பொதுமக்கள் வாக்களித்த நிலையில், உத்தரகண்டில் 62.5 சதவிகிதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இதேபோன்று கோவாவிலும் 40 பேரவைத் தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. காலை முதல் பொதுமக்கள் வாக்களித்த நிலையில், அங்கு 78.94 சதவிகிதம் வாக்குகள் பதிவாகியுள்ளது.

அதிகபட்சமாக சன்குலிம் தொகுதியில் 89.64 சதவிகிதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. வடக்கு கோவாவில் அதிகபட்சமாக 79 சதவிகிதம் வாக்குகளும், தெற்கு கோவாவில் 78 சதவிகித வாக்குகளும் பதிவாகியுள்ளது.

உத்தரகண்டில் பாஜக, காங்கிரஸ், ஆம்ஆத்மி கட்சிகளுக்கு இடையே மும்முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது.

கோவாவில் 301 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இங்கு பாஜக, காங்கிரஸ், கோவா முன்னேற்றக் கட்சிகளுக்கு இடையே போட்டி நிலவுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.