இந்தியா

3 மாநிலங்களின் பேரவைத் தேர்தல்: காலை 11 மணி வாக்குப்பதிவு நிலவரம்

DIN

கோவா, உத்தரகண்ட், உத்தரப் பிரதேசம் ஆகிய 3 மாநில சட்டப்பேரவைகளுக்கான 11 மணி வாக்குப்பதிவு நிலவரத்தை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

உத்தரகண்டின் 70 தொகுதிகளுக்கும், கோவாவின் 40 தொகுதிகளுக்கு இன்று காலை 7 மணிக்கு ஒரே கட்டமாக வாக்குப்பதிவு தொடங்கியது. அதேபோல,  உத்தர பிரதேசத்தில் இரண்டாம் கட்டமாக 55 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், இன்று காலை 11 மணி நிலவரப்படி வாக்குப்பதிவு சதவீதத்தை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, கோவாவில் 26.63%, உத்தரகண்டில் 18.97%, உத்தரப் பிரதேசத்தில் 23.03% வாக்காளர்கள் வாக்குகளை பதிவு செய்துள்ளனர்.

சட்டப்பேரவைகளுக்கான வாக்குப்பதிவுகள் மாலை 6 மணிவரை நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல் தொடருக்குப் பின் எம்.எஸ்.தோனியின் 7 நிமிட விடியோ!

மீண்டும் ஆட்சிக்கு வந்தால்... நவீன் பட்நாயக்கின் முதல் உத்தரவு!

கால் முளைத்த நிலவு! ஜான்வி கபூர்..

பந்துவீச்சில் மிரட்டிய கேகேஆர்; 159 ரன்களுக்கு ஆட்டமிழந்த சன்ரைசர்ஸ்!

ஸ்டாக்ஹோமில் டெய்லர்!

SCROLL FOR NEXT