முகப்பு
இந்தியா

'அடுத்த 5 ஆண்டுகளுக்கு விவசாயிகளுக்கு இலவச மின்சாரம்' - அமித் ஷா பேச்சு

உத்தரப் பிரதேசத்தில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், விவசாயிகள் அடுத்த 5 ஆண்டுகளுக்கு மின் கட்டணம் செலுத்தத் தேவையில்லை என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:24 AM
பகிர்:

உத்தரப் பிரதேசத்தில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், விவசாயிகள் அடுத்த 5 ஆண்டுகளுக்கு மின் கட்டணம் செலுத்தத் தேவையில்லை என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். 

உத்தர பிரதேசத்தில் 403 தொகுதிகளுக்கான சட்டப்பேரவைத் தோ்தல் பிப்.10 முதல் மாா்ச் 7-ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இன்று இரண்டாம் கட்டத் தேர்தல் நடைபெறுகிறது. 

இந்நிலையில், இன்று உத்தரப் பிரதேச மாநிலம் திபியாபூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அமித் ஷா, 

உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெறும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. முதல் மற்றும் இரண்டாம் கட்டத் தேர்தல்களுக்குப் பிறகு மாநிலத்தில் இருந்து சமாஜ்வாதி கட்சி அழிக்கப்பட்டுவிட்டது. 

ஹோலி பண்டிகை மார்ச் 18 ஆம் தேதி வருகிறது. மார்ச் 10 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நாளில் பாஜக அரசை ஆட்சிக்கு கொண்டு வாருங்கள்.  இலவச கேஸ் சிலிண்டர்கள் மார்ச் 18 ஆம் தேதி உங்கள் வீட்டிற்கு வரும். அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு விவசாயிகள் மின் கட்டணம் செலுத்தத் தேவையில்லை. 

உத்தரபிரதேசத்தில் 300 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்று ஆட்சி அமைத்த பாஜகவின் பெரும்பான்மை இந்த முறை மேலும் அதிகரிக்க வேண்டும்' என்றார். 

முழு கட்டுரையைப் படிக்க →