இந்தியா

பப்பி லஹரி மறைவு: குடியரசுத் தலைவர், பிரதமர் இரங்கல்

DIN

பிரபல பாலிவுட் இசையமைப்பாளர் பப்பி லஹரி மறைவிற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளனர்.

மும்பை மருத்துவமனையில் பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை பெற்று வந்த பப்பி லஹரி(வயது 69) இன்று அதிகாலை உயிரிழந்தார். இவர், ஹிந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் 200க்கும் அதிகமான படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

இந்நிலையில், லஹரியின் மறைவிற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

குடியரசுத் தலைவர் டிவிட்டரில் பதிவிட்ட இரங்கல் செய்தியில்,

“பப்பி லஹிரி இணையற்ற பாடகர் மற்றும் இசையமைப்பாளர். இவரது பாடல்கள் இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளிலும் பிரபலம் அடைந்தன. அவரது மறக்கமுடியாத பாடல்கள் நீண்ட காலமாக கேட்போரை மகிழ்விக்கும். அவரது குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்.”

பிரதமர் டிவிட்டரில் பதிவிட்ட இரங்கல் செய்தியில்,

“பப்பி லஹிரியின் இசை அனைத்தும் உள்ளடக்கியதாகவும்., பல்வேறு உணர்வுகளை அழகாக வெளிப்படுத்துவதாகவும் இருந்தது. தலைமுறை தலைமுறையாக மக்கள் அவரது படைப்புகளை தொடர்புபடுத்த முடியும். அவருடைய கலகலப்பான இயல்பை அனைவரும் தவற விடுவார்கள். அவரது மறைவு வருத்தம் அளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் இரங்கல்கள்.”

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சூறைக்காற்றால் மின்கம்பிகள் துண்டிப்பு: மின்சாரம் இல்லாமல் மக்கள் கடும் அவதி

கடலோர பகுதிகளில் இன்று மாலை வரை ‘கள்ளக் கடல்’ எச்சரிக்கை

திருநள்ளாறு கோயில் பகுதியில் சீரமைப்புப் பணி

ஆட்டோ ஓட்டுநா் போக்ஸோவில் கைது

கிறிஸ்து அரசா் ஆலயத்தில் பங்குத் திருவிழா நிறைவு

SCROLL FOR NEXT