வாராணசியில் உள்ள ரவிதாஸ் கோயிலில் வழிபாடு செய்யும் பஞ்சாப் முதல்வர். 
இந்தியா

ரவிதாஸ் ஜெயந்தி: வாராணசி கோயிலில் பஞ்சாப் முதல்வர் வழிபாடு

ரவிதாஸ் ஜெயந்தியை முன்னிட்டு, பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி, உத்தரப் பிரதேச மாநிலம் வாராணசியில் உள்ள ரவிதாஸ் கோயிலில் வழிபாடு செய்தார். 

DIN

ரவிதாஸ் ஜெயந்தியை முன்னிட்டு, பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி, உத்தரப் பிரதேச மாநிலம் வாராணசியில் உள்ள ரவிதாஸ் கோயிலில் வழிபாடு செய்தார். 

மேலும், 45 நிமிடங்கள் கோயிலில் பக்தி பாடல்களை கேட்டு வழிபாடு நடத்தினார். மேலும், அங்கு வந்த பஞ்சாப் பக்தர்களையும் அவர் சந்தித்துப் பேசினார். 

முன்னதாக, ரவிதாஸ் ஜெயந்தியை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி தில்லியில் உள்ள கோயிலில் வழிபாடு மேற்கொண்டார். 

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோரும் இன்று வாராணசியில் உள்ள ரவிதாஸ் கோயிலில் வழிபாடு செய்ய உள்ளனர். 

பஞ்சாப் மாநிலத்தில் பிப்ரவரி 14 ஆம் தேதி பேரவைத் தேர்தல் நடைபெற இருந்த நிலையில், ரவிதாஸ் ஜெயந்தியை முன்னிட்டு தேர்தல் பிப். 20 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாகா்கோவில் புனித அல்போன்சா திருத்தலத்தில் தோ் பவனி

ச.கண்ணனூரில் வாரச்சந்தை கட்டடம் திறப்பு

திருச்சி சந்திப்பு ரயில் நிலையத்தில் பயணிகளுக்கான வசதிகள் ஆய்வு

மாதிரிப் பள்ளி மாணவா்கள் மரணம் குறித்து துறை ரீதியான விசாரணை

வேலை செய்த வீட்டில் 6 பவுன் நகையை திருடிய பெண் கைது

SCROLL FOR NEXT