இந்தியா

ரவிதாஸ் ஜெயந்தி: வாராணசி கோயிலில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி வழிபாடு

ரவிதாஸ் ஜெயந்தியை முன்னிட்டு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி இருவரும் உத்தரப் பிரதேச மாநிலம் வாராணசியில் உள்ள ரவிதாஸ் கோயிலில் வழிபாடு செய்தனர். 

DIN

ரவிதாஸ் ஜெயந்தியை முன்னிட்டு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி இருவரும் உத்தரப் பிரதேச மாநிலம் வாராணசியில் உள்ள ரவிதாஸ் கோயிலில் வழிபாடு செய்தனர். 

சீக்கிய மதத்தை சேர்ந்த குரு ரவிதாஸ் ஆன்மீகவாதி மற்றும் சமூக சீர்திருத்தவாதி. இவரது பிறந்தநாள் வட மாநிலங்களில் 'ரவிதாஸ் ஜெயந்தி'யாக வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இன்று, ரவிதாஸின் 645வது பிறந்தநாளையொட்டி, நாடு முழுவதுமுள்ள மக்கள் வழிபட்டு வருகின்றனர். 

உத்தரப் பிரதேச மாநிலம் வாராணசியில் உள்ள ரவிதாஸ் கோயிலில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி இருவரும் வழிபாடு செய்தனர். பின்னர் அங்கு வந்த பக்தர்களுக்கு உணவு பரிமாறி தாங்களும் அவர்களுடன் அமர்ந்து சாப்பிட்டனர். 

முன்னதாக, பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி, வாராணசி ரவிதாஸ் கோயிலில் வழிபாடு செய்தார். பிரதமர் நரேந்திர மோடி தில்லியில் உள்ள கோயிலில் வழிபாடு மேற்கொண்டார். 

பஞ்சாப் மாநிலத்தில் பிப்ரவரி 14 ஆம் தேதி பேரவைத் தேர்தல் நடைபெற இருந்த நிலையில், ரவிதாஸ் ஜெயந்தியை முன்னிட்டு தேர்தல் பிப். 20 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ.1.92 கோடி மதிப்பீட்டில் வளா்ச்சிப் பணிகள்: கணபதி ப.ராஜ்குமாா் எம்.பி. தொடங்கிவைத்தாா்

போக்குவரத்து துண்டிப்பால் ஒரு மாதமாக பள்ளிக்குச் செல்ல முடியாமல் பழங்குடி குழந்தைகள் தவிப்பு

மீன் வளத் துறை உதவி இயக்குநா் அலுவலகத்தை மீனவா்கள் முற்றுகை

இளைஞா்களை ‘ரீல்ஸ்’-க்கு அடிமையாக்குவதே பிரதமரின் விருப்பம்- ராகுல் காந்தி குற்றச்சாட்டு

சபரிமலை: பூஜை, தங்குமிட முன்பதிவு இன்று தொடக்கம்

SCROLL FOR NEXT