இந்தியா

பயங்கரவாதிகளிடம் அமெரிக்க ஆயுதங்கள்: அதிர்ச்சியளிக்கும் உண்மை

ANI


புது தில்லி: இந்திய எல்லைக்குள் அத்துமீறு ஊடுருவ முயன்ற பங்கரவாதி மீது நடத்தப்பட்ட தாக்குதலில், அவர் கொல்லப்பட்டார். அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள், ஆப்கானில் அமெரிக்கப் படைகள் விட்டுச் சென்றவை என்பது தெரிய வந்துள்ளது.

ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்த மேஜர் ஜெனரல் அஜய் சந்த்புரியா இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

இந்திய எல்லைப் பகுதிக்குள் ஊடுருவ முயன்று, கொல்லப்பட்ட பயங்கரவாதியிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள், வழக்கமாக பயங்கரவாதிகளிடம் காணப்படும் ஆயுதங்களைப் போல இல்லை. இவை, ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படையினரால் விட்டுச் செல்லப்பட்டவை. எனவே, தற்போதைய கணிப்பின்படி, பயங்கரவாதிகள் மட்டுமல்ல, காஷ்மீருக்கு வெளிநாட்டிலிருந்து ஆயுதங்களும் வருகின்றன என்று தெரிவித்துள்ளார்.

இதன் மூலம், ஆப்கனில் பாதுகாப்புப் பணிக்காக வந்த அமெரிக்கப் படைகள், அந்நாட்டை விட்டு வெளியேறும் போது விட்டுச் சென்ற ஏராளமான சக்தி வாய்ந்த ஆயுதங்களும், தொழில்நுட்பத்தில் சிறந்த கண்காணிப்புக் கருவிகளும், பாகிஸ்தான் வழியாக காஷ்மீருக்கு கடத்தப்படுகிறதோ என்ற அச்சமும் எழுந்துள்ளது என்று கூறுகிறார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாகிஸ்தான்: மினி டிரக் பள்ளத்தில் கவிழ்ந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 பேர் பலி

ஔரங்கஷீப்பின் ஆன்மா காங்கிரஸுக்குள் புகுந்துவிட்டது: யோகி ஆதித்யநாத்

இந்திய மசாலாக்களுக்குத் தடை விதித்த நேபாளம்!

கடினமாக இருக்கிறது... கடைசி லீக் போட்டிக்குப் பிறகு ஹார்திக் பாண்டியா!

கோட்டை ரயில் நிலையத்திலிருந்து பறக்கும் ரயில் சேவை.. ஆகஸ்ட் முதல்

SCROLL FOR NEXT