முகப்பு
இந்தியா

தாமரையில்தான் லட்சுமி வீட்டுக்கு வரும்: ராஜ்நாத் சிங்

லட்சுமி தாமரையில் அமர்ந்துதான் வீட்டுக்கு வரும் என மத்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பாஜகவுக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொண்டார்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:27 AM
கோப்புப்படம்
பகிர்:


லட்சுமி தாமரையில் அமர்ந்துதான் வீட்டுக்கு வரும் என மத்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பாஜகவுக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொண்டார்.

உத்தரப் பிரதேசத்தில் அமேதி அருகே பிரசாரம் மேற்கொண்ட அவர் பேசுகையில், "லட்சுமி தெய்வம் யார் வீட்டுக்கும் சைக்கிளிலோ, யானையிலோ அல்லது யாராவது கையிலோ அமர்ந்து வராது. தாமரையில் அமர்ந்துதான் வரும்" என்றார்.

மேலும், லட்சுமி வருகையின் அறிகுறிதான் பிரதமரின் திட்டங்கள் எனவும் அவர் விளக்கமளித்தார்.

உத்தரப் பிரதேசத்தில் சமாஜவாதி கட்சியின் சின்னம் சைக்கிள், பகுஜன் சமாஜ் கட்சியின் சின்னம் யானை மற்றும் காங்கிரஸ் கட்சியின் சின்னம் கை. இவற்றைக் குறிப்பிட்டே ராஜ்நாத் சிங் பிரசாரத்தை மேற்கொண்டிருக்கிறார்.

உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. முதலிரண்டு கட்ட வாக்குப்பதிவு ஏற்கெனவே நிறைவடைந்த நிலையில், மூன்றாம் கட்ட வாக்குப் பதிவு இன்று நடைபெற்றது.

அமேதியில் பிப்ரவரி 27-ம் தேதி 5-வது கட்டமாக வாக்குப் பதிவு நடைபெறுகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →