முகப்பு
இந்தியா

பஜ்ரங் தள் ஆர்வலர் கொலை: ஷிவமொகாவில் 144 தடை

ஷிவமொகாவில் பஜ்ரங் தள் ஆர்வலர் கொலையையடுத்து அங்கு பதற்றமான சூழல் நிலவுதால் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:27 AM
பகிர்:

ஷிவமொகாவில் பஜ்ரங் தள் ஆர்வலர் கொலையையடுத்து அங்கு பதற்றமான சூழல் நிலவுதால் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலம், ஷிவமொகாவில் நேற்று இரவு 9 மணியளவில் பஜ்ரங் தள் ஆர்வலர் ஹர்ஷா(26) மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இச்சம்பவத்தையடுத்து அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 

ஷிவமொகா நகரில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தொடர்ந்து அப்பகுதியில் பதற்றம் நிலவுதால் 144 தடை உத்தரவை பிறப்பித்துள்ளனர். 

இதற்கிடையில், சிவமொக்கா நகரில் உள்ள சீகேஹத்தி பகுதியில் மர்ம நபர்கள் சிலர் வாகனங்களுக்கு தீவைத்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்புப் படையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

முழு கட்டுரையைப் படிக்க →