முகப்பு
இந்தியா

கடற்படையின் அணிவகுப்பை பார்வையிட்டார் குடியரசுத் தலைவர்

விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற கடற்படையின் அணிவகுப்பை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் திங்கள்கிழமை பார்வையிட்டார்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:27 AM
கடற்படையின் அணிவகுப்பை பார்வையிட்டார் குடியரசுத் தலைவர்
பகிர்:

விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற கடற்படையின் அணிவகுப்பை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் திங்கள்கிழமை பார்வையிட்டார்.

கிழக்கு கடற்படை கட்டளையின் 12வது அணிவகுப்பு நிகழ்ச்சி இன்று காலை விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கலந்து கொண்டார்.

ஐஎன்எஸ் சுமித்ரா கப்பலில் பயணித்தபடி, கடற்படை வீரர்களின் மரியாதையை ஏற்றுக் கொண்ட குடியரசுத் தலைவர், அணிவகுப்பை பார்வையிட்டார். உடன், பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இருந்தார்.

இந்த நிகழ்வில், கடற்படையின் 60 கப்பல்கள், 55 விமானங்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்கள் பங்கேற்றன.

முன்னதாக நிகழ்வில் பங்கேற்க சென்ற குடியரசுத் தலைவரை ஆந்திரப் பிரதேச முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி விமான நிலையத்தில் வரவேற்றார்.

முழு கட்டுரையைப் படிக்க →