முகப்பு
இந்தியா

உ.பி.யில் சாலை விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலி 

உத்தரப் பிரதேசத்தில், சீதாப்பூர்-லக்னோ சாலையில் வேகமாக வந்த பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்தனர். 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:27 AM
பகிர்:

உத்தரப் பிரதேசத்தில், சீதாப்பூர்-லக்னோ சாலையில் வேகமாக வந்த பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்தனர். 

கைராபாத் பகுதியில் நடந்த இந்த விபத்து சம்பவத்தில் வினிதா சுக்லா (55), அவரது மகன் கிருஷ்ணா (12) மற்றும் மருமகன் விபு தீட்சித் ஆகியோர் உயிரிழந்ததாக திங்கள்கிழமை காவல்துறையினர் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளனர். 

பேருந்தின் ஓட்டுநரும், நடத்துனரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர், அவர்களை தேடும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். 
 
முழு கட்டுரையைப் படிக்க →