முகப்பு
இந்தியா

ஒடிசாவில் 116 கிலோ கஞ்சா பறிமுதல்: ஒருவர் கைது

ஒடிசா காவல்துறையின் சிறப்பு அதிரடிப்படை 116 கிலோ கஞ்சாவுடன் ஒருவரை பதேகரில் கைது செய்துள்ளனர். 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:29 AM
கோப்புப் படம்
பகிர்:

ஒடிசா காவல்துறையின் சிறப்பு அதிரடிப்படை 116 கிலோ கஞ்சாவுடன் ஒருவரை பதேகரில் கைது செய்துள்ளனர். 

சிறப்பு அதிரடிப்படையின் மூத்த அதிகாரி கூறுகையில், 

தலபெஹெரா சாஹியில் நடத்திய சோதனையில், சட்டவிரோதமாகப் போதைப்பொருள் வைத்திருந்ததற்காக ககன் பெஹெரா என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் 116 கஞ்சா, ஒரு கார் உள்ளிட்ட பொருள்கள் பறிமுதல் செய்தனர். 

குற்றம் சாட்டப்பட்டவர் கஞ்சா வைத்திருந்ததற்கான எந்த ஆவணத்தையும் சமர்ப்பிக்கவில்லை. எனவே, அவர் நீதிமன்றத்தில் முன்னிறுத்தப்படுவார் என்று அந்த அதிகாரி கூறினார். 

மேலும் விசாரணை நடைபெற்று வருவதாகவும் அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார். 
 

முழு கட்டுரையைப் படிக்க →