ஒடிசாவில் பஞ்சாயத்து தேர்தலுக்கான கடைசி கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது.
ஒடிசாவில் பஞ்சாயத்து தேர்தல் ஐந்து கட்டங்களாக நடைபெறுகிறது. இதில் கடந்த பிப்ரவரி 16, 18, 20, 22 ஆகிய தேதிகளில் 4 கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடந்துமுடிந்தது. இன்று ஐந்தாம் கட்ட தேர்தல் நடைபெற்று வருகின்றது.
மல்கங்கிரியின் மாவோயிஸ்டுகளால் பாதிக்கப்பட்ட ஸ்வாபிமான் அஞ்சல் உள்பட 25 மாவட்டங்களில், கடுமையான பாதுகாப்பு மற்றும் கரோனா வழிகாட்டுதல்களுடன் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுவதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
975 பஞ்சாயத்துகளில் உள்ள 13,514 வாக்குச் சாவடிகளில் காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது.
131 ஜில்லா பரிஷத் மண்டலங்களில் வேட்பாளர்களின் தலைவிதியைத் தீர்மானிக்க 41 லட்சத்திற்கும் அதிகமான வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளனர்.
ஸ்வாபிமான் அஞ்சலில் உள்ள இரண்டு ஜில்லா பரிஷத் மண்டலங்களிலும், 18 பஞ்சாயத்துகளிலும் காலை 9 மணி வரை வாக்குப்பதிவு அமைதியாக நடந்த நிலையில், பத்ரக் மாவட்டத்தின் தாம்நகர் தொகுதியில் உள்ள கடாசாஹி பஞ்சாயத்தின் வார்டு எண் 1ல் சிலர் வாக்குச் சாவடிக்குள் புகுந்து வாக்குச் சீட்டுகளைத் தகர்த்ததால் வாக்குப்பதிவு தடைப்பட்டது.
பூரி மாவட்டத்தின் கோப் படதாரா பஞ்சாயத்தில் உள்ள கடரூபாஸில் நடைபெற்ற வன்முறையில் ஒருவர் படுகாயமடைந்தார். அவர் புவனேஸ்வரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 26 முதல் 28 வரை நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.