உ.பி.யில் 4 கட்ட தேர்தலில் 1,137 வன்முறை வழக்குகள் பதிவு
உத்தரப் பிரதேச காவல்துறை முதல் நான்கு கட்டத் தேர்தல்களில் நடத்தை விதிகளை மீறியதாக 1,137 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
உத்தரப் பிரதேச காவல்துறை முதல் நான்கு கட்டத் தேர்தல்களில் நடத்தை விதிகளை மீறியதாக 1,137 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
டிஜிபி தலைமையகத்தில் உள்ள மூத்த காவல்துறை அதிகாரிகள் கூறுகையில்,
தேர்தலின் போது இதுவரை ஒரு வன்முறை அல்லது மோதல் சம்பவம் கூட பதிவாகவில்லை. காவல்துறையின் முன்கூட்டியே ஆயத்தம் மற்றும் மத்திய துணை ராணுவப் படைகள் அதிக அளவில் குவிக்கப்பட்டதே இதற்குக் காரணம்.
Advertisement
Advertisement
தேர்தல் விதிகளை மீறிய மாவட்டங்களில் 51 வழக்குகளுடன் மீரட்.முதலிடத்தில் உள்ளது. அதைத்தொடர்ந்து ஜான்சியில் 45 வழக்குகள் பதிவாகியுள்ளது.
மொத்தம் பதிவாகியுள்ள 1,137 வழக்குகளும் ஆதாரங்களின்படி முறையாக விசாரிக்கப்படும் என்று சட்டம் மற்றும் ஒழுங்கு கூடுதல் இயக்குநர் ஜெனரல் (ADG) பிரசாந்த் குமார் தெரிவித்தார்.
தேர்தல் தொடங்குவதற்கு முன்பு அனைத்து மாவட்ட காவல்துறைத் தலைவர்களுக்கும் பல சுற்று விளக்கங்கள் வழங்கப்பட்டன.
ஒவ்வொரு கட்ட தேர்தலுக்கும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு, மத்திய ஆய்தமேற்திய துணை ராணுவப் படையினர் நிறுத்தப்பட்டனர்.
தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி ஆளில்லா விமானங்களைப் பயன்படுத்தினோம் என்று அவர் தெரிவித்தார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.