இந்தியா

நாட்டில் ஒரே நாளில் 13,166 பேருக்கு கரோனா

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 13,166 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் ஒரே நாளில் 302 பேர் உயிரிழந்தனர்.

DIN


நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 13,166 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் ஒரே நாளில் 302 பேர் உயிரிழந்தனர்.

நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் விவரங்கள் குறித்த விவரங்களை மத்திய சுகாதாரத் துறை தினசரி வெளியிட்டு வருகின்றது. இன்று வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள தகவலின்படி,

நாட்டில் புதிதாக 13,166  பேருக்கு கரோனா கண்டறியப்பட்டுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 302 பேர் உயிரிழந்தனர். இதனால் இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,13,226-ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.20 சதவிகிதமாக உள்ளது. 

நேற்று ஒரேநாளில் 26,988 பேர் கரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினர். இதனால் குணமடைந்தோரின் எண்ணிக்கை 4,22,46,884 ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தோர் விகிதம் 98.49 சதவிகிதமாக உள்ளது. 
தற்போது 1,34,235 பேர் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். நாடு முழுவதும் இதுவரை 1,76,86,89,266 கோடி கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 33,84,744 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் விகிதம் 0.31 சதவிகிதமாகவும் குறைந்துள்ளது. 

நாடு முழுவதும் இதுவரை 75,68,51,787 கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 32,04,426 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மாநகரில் கஞ்சா விற்பனை: 4 போ் கைது

பைக்கில் வேகமாக வந்தவரை தட்டிக்கேட்டவருக்கு வெட்டு: 4 போ் கைது

விடுதலைத் சிறுத்தைகள் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

தஞ்சாவூா் மாமன்றக் கூட்டத்தில் திமுக உறுப்பினா்கள் வெளிநடப்பு

மணல் லாரி உரிமையாளா்கள் ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT