முகப்பு
இந்தியா

உக்ரைனில் சிக்கிய மகாராஷ்டிர மக்களை மீட்க நடவடிக்கை: அஜித் பவார்

உக்ரைனில் சிக்கியுள்ள மகாராஷ்டிர மக்களை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக அம்மாநில துணை முதல்வர் அஜித் பவார் சனிக்கிழமை தெரிவித்துள்ளார். 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:31 AM
கோப்புப்படம்
பகிர்:

உக்ரைனில் சிக்கியுள்ள மகாராஷ்டிர மக்களை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக அம்மாநில துணை முதல்வர் அஜித் பவார் சனிக்கிழமை தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், 

மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த சுமார் 1200 முதல் 2000 பேர் வரை உக்ரைனில் சிக்கித் தவித்து வருகின்றனர். அவர்கள் அனைவரையும் பத்திரமாக மீட்கும் நடவடிக்கையை மத்திய அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகின்றது.

மகாராஷ்டிரத்தில் சிக்கித் தவிப்பவர்களில் இதுவரை 366 பேரை மட்டுமே தொடர்புகொள்ள முடிந்தது. மற்றவர்களைத் தொடர்புகொள்ள தொடர்ந்து முயற்சித்து வருகிறோம். விரைவில் அவர்கள் பத்திரமாக நாடு திரும்புவார்கள் என்றார். 

மேலும், மகாராஷ்டிரத்தில் கரோனா தொற்று பெருமளவில் குறைந்து வருவதால் மருத்துவமனைகள் மூடப்படுவது குறித்தும் அவர் பேசினார். 

பிப்ரவரி 28 முதல் புணேயில் உள்ள இரண்டு ஜம்போ மருத்துவமனைகளையும் மூட முடிவு செய்துள்ளோம். கரோனாவின் மூன்றாவது அலையின்போது இந்த மருத்துவமனைகளை நாங்கள் பயன்படுத்தவில்லை என்று அவர் தெரிவித்தார். 

முழு கட்டுரையைப் படிக்க →