முகப்பு
இந்தியா

பாகிஸ்தானில் தீவிரவாதி சுட்டுக் கொலை

பாகிஸ்தானின் வடமேற்கில் பாதுகாப்புப் படை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் தீவிரவாதி ஒருவர் கொல்லப்பட்டதாக ராணுவம் சனிக்கிழமை தெரிவித்தது. 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:31 AM
பகிர்:

பாகிஸ்தானின் வடமேற்கில் பாதுகாப்புப் படை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் தீவிரவாதி ஒருவர் கொல்லப்பட்டதாக ராணுவம் சனிக்கிழமை தெரிவித்தது. 

நீண்ட காலமாக இஸ்லாமிய தீவிரவாதிகளுக்கு பாதுகாப்பான புகலிடமாகக் கருதப்படும் வடக்கு வஜிரிஸ்தான் பழங்குடியின மாவட்டத்தின் ஸ்பின்வாம் பகுதியில் இந்த சோதனை நடத்தப்பட்டது. 

தீவிரவாதிகளிடமிருந்து பழங்குடியினப் பகுதியை அகற்றுவதற்கான தொடர்ச்சியான நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த சோதனை நடத்தப்பட்டது. 

இந்த சோதனையில் தீவிரவாதிகளின் மறைவிடத்தில் பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் தீவிரவாதி ஒருவர் கொல்லப்பட்டார். 

உயிரிழந்த தீவிரவாதி கடந்த சில மாதங்களாக பாதுகாப்புப் படையினர் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வந்தவர்.  மேலும், மறைவிடத்திலிருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிபொருள்கள் கைப்பற்றப்பட்டதாக ராணுவம் தெரிவித்துள்ளது. 

கடந்த 2014ஆம் ஆண்டு பெஷாவரில் ராணுவ பள்ளியின் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 150க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இதில் பெரும்பாலும் குழந்தைகள் ஆவர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

முழு கட்டுரையைப் படிக்க →