இந்தியா

உக்ரைன் விவகாரம்: பிரதமர் மோடி உயர்மட்ட ஆலோசனை

DIN

உக்ரைன் - ரஷியா இடையிலான போர் விவகாரம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி உயர்மட்ட ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.

அடுத்த 24 மணி நேரத்தில் உக்ரைனிலிருந்து இந்தியர்களை மீட்க 7 விமானங்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் ஆலோசனை நடைபெற்று வருகிறது. 

போர் நடைபெற்று வரும் உக்ரைனிலிருந்து மும்பைக்கு ஒரு விமானம் மூலமும், தில்லிக்கு இரு விமானங்கள் மூலமும் இந்திய மாணவர்கள் அழைத்து வரப்பட்டனர். அதனைத் தொடர்ந்து இன்று ஒரு விமானம் மூலம் மாணவர்கள் அழைத்து வரப்பட்டனர். இதுவரை 709 பேர் இந்தியாவுக்கு வந்து சேர்ந்துள்ளனர்.

இந்நிலையில், உக்ரைனின் அண்டை நாடுகளான மால்டோவா, ஹங்கேரி, ஸ்லோவேக்கியா, ருமேனியா ஆகிய நாடுகளின் உதவியுடன் உக்ரைனில் சிக்கியுள்ள மாணவர்களை மீட்க மத்திய வெளியுறவுத் துறை பேச்சுவார்த்தை நடத்தியது.

இந்நிலையில், உக்ரைனில் எஞ்சியுள்ள மாணவர்களை மீட்பது தொடர்பாகவும், போர் நிலவரம் குறித்தும் உயர்மட்ட அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 6 முதல் நெகிழிப் பொருள்களுக்கு தடை

அரசுப் பேருந்து கண்ணாடி உடைப்பு

அண்ணாமலைப் பல்கலை. பெண்கள் கால்பந்து அணிக்கு பாராட்டு

கிணற்றில் தவறி விழுந்த முதியவா் மீட்பு

காலாவதியான பொருள்கள் விற்பனை: பல்பொருள் அங்காடிக்கு ‘சீல்’

SCROLL FOR NEXT