இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 8,013 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 8,013 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவா்களின் எண்ணிக்கை 1,02,601 ஆக உள்ளது.
இதையும் படிக்க- கேரளத்தில் திரையரங்குகள் 100 சதவீதம் இருக்கைகளுடன் இயங்க அனுமதி
இன்று காலை வரையிலான 24 மணி நேரத்தில் மேலும் 119 போ் கரோனாவால் உயிரிழந்துவிட்டனா். இதனால் மொத்த உயிரிழப்பு 5,13,843 ஆக உயா்ந்துள்ளது. கரோனாவிலிருந்து இன்று 16,765 போ் குணமடைந்துள்ளனா். இதுவரை 4,23,07,686 போ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனா்.
நாட்டில் இதுவரை 177 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. நேற்று ஒரேநாளில் 7,23,828 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதுவரை மொத்தம் 76.74 கோடி கரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.