உத்தரகண்ட்: ருத்ரபிரயாக் கிராமத்தில் மீண்டும் நிலச்சரிவு 
இந்தியா

உத்தரகண்ட்: ருத்ரபிரயாக் கிராமத்தில் மீண்டும் நிலச்சரிவு

உத்தரகண்ட் மாநிலம் ருத்ரபிரயாக் கிராமத்தில் இன்று ஏற்பட்ட நிலச்சரிவில், ஏராளமான மாட்டு கொட்டகைகள், கழிவறைகள் சேதமடைந்தன.

PTI


ருத்ரபிரயாக்: உத்தரகண்ட் மாநிலம் ருத்ரபிரயாக் கிராமத்தில் இன்று ஏற்பட்ட நிலச்சரிவில், ஏராளமான மாட்டு கொட்டகைகள், கழிவறைகள் சேதமடைந்தன. கிராமத்திலிருந்து 12க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

ருத்ரபிரயாக்கின் மலைக் கிராமமான ஜலிமத்தில் இன்று காலை நேரிட்ட நிலச்சரிவினால், பல இடங்கள் சரிந்துவிழுந்தன. அலக்னந்தா ஆற்றின் கரையோரம் நூறு மீட்டர் தூரம் அளவுக்கு இந்த நிலச்சரிவு நேரிட்டுள்ளதாக மாவட்ட பேரிடர் மேலாண்மை அதிகாரி தெரிவித்துள்ளார். இந்த நிலச்சரிவு மழையால் ஏற்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து சில இடங்களில் நிலச்சரிவு நேரிட்டு வருவதாகவும், பாதுகாப்புக் கருதி அங்கு வசித்துவந்த 12 குடும்பங்கள் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டிருப்பதாகவும் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சட்டவிரோதமாக மரங்களை வெட்டுவதே பேரழிவுக்கு காரணம்: உச்ச நீதிமன்றம்

அக்கறை காட்ட ஒன்று கூடுங்கள்: தினேஷ் கார்த்திக்

ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் பிரதமர் மோடியின் அர்ப்பணிப்பை நிரூபிக்கிறது: மோகன் யாதவ்!

இளைஞரைக் கொலை செய்ய திட்டம்: 8 போ் கைது

ரூ.90,000 சம்பளத்தில் ஆயில் இந்தியா நிறுவனத்தில் வேலை!

SCROLL FOR NEXT