இந்தியா

ஒடிசாவில் 1-7ம் வகுப்பு வரை பள்ளிகள் மீண்டும் திறப்பு

DIN

கிட்டத்தட்ட இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு ஒடிசாவில் 1 முதல் 7ஆம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு இன்று முதல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டன. 

முன்னதாக, 1 முதல் 7 வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பிப்ரவரி 14 முதல் பள்ளிகள் திறக்கப்படும் என அரசு அறிவித்திருந்தது. ஆனால் பஞ்சாயத்துத் தேர்தல் நடைபெற்ற நிலையில் தாமதம் ஏற்பட்டது. ஆனால் உயர் வகுப்பு மாணவர்களுக்கான பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் ஏற்கனவே பிப். 7 முதல் மீண்டும் திறக்கப்பட்டன. 

பள்ளிகள் இன்று காலை திறக்கப்பட்ட நிலையில், மாணவர்களுக்கு பூங்கொத்து மற்றும் திலகமிட்டு ஆசிரியர்கள் வரவேற்றனர். இதனால், பள்ளி மாணவர்களுக்கு பண்டிகை போன்ற உணர்வு ஏற்பட்டது. மேலும், கஜபதி மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியில் மேளம் அடித்து மாணவர்களை வரவேற்றனர். 

மாணவர்கள் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி போன்ற கரோனா வழிகாட்டு நெறிமுறைகளைக் கடைப்பிடிக்க அறிவுறுத்தப்பட்டனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இது எதுங்க அட்டைப் படம்? சோனல் சௌகான்...

பார்வை ஒன்று போதுமே... விமலா ராமன்!

மீண்டும் துபையில் கனமழை: விமான சேவை பாதிப்பு!

இந்தியாவின் நிலக்கரி உற்பத்தி 7.4 சதவிகிதம் உயர்வு!

தமிழகத்துக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை! | செய்திகள்: சிலவரிகளில் | 02.05.2024

SCROLL FOR NEXT