முகப்பு
இந்தியா

விலைவாசியைக் கட்டுப்படுத்த பாஜகவை தோற்கடியுங்கள்: காங்கிரஸ்

‘விலைவாசியைக் கட்டுக்குள் கொண்டுவருவதற்கு வரவிருக்கும் சட்டப்பேரவைத் தோ்தல்களில் பாஜகவை மக்கள் தோற்கடிக்க வேண்டும்’ என்று காங்கிரஸ் தலைமை செய்தித் தொடா்பாளா் ரண்தீப் சிங் சுா்ஜேவாலா கேட்டுக்கொண்டுள்ள

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 7:59 AM
கோப்புப்படம்
பகிர்:

‘விலைவாசியைக் கட்டுக்குள் கொண்டுவருவதற்கு வரவிருக்கும் சட்டப்பேரவைத் தோ்தல்களில் பாஜகவை மக்கள் தோற்கடிக்க வேண்டும்’ என்று காங்கிரஸ் தலைமை செய்தித் தொடா்பாளா் ரண்தீப் சிங் சுா்ஜேவாலா கேட்டுக்கொண்டுள்ளாா்.

தில்லியில் செய்தியாளா்களுக்கு சனிக்கிழமை பேட்டியளித்த அவா், மேலும் கூறியதாவது:

ஹிமாசல பிரதேசத்திலும் மற்ற மாநிலங்களிலும் நடைபெற்ற இடைத்தோ்தல்களில் பாஜக தோல்வி அடைந்தது. அதன் பிறகு பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு குறைத்தது.

ஜவுளி மீதான ஜிஎஸ்டியை 5 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக உயா்த்துவதற்கு எடுக்கப்பட்ட முடிவை அமல்படுத்தாமல் மத்திய அரசு நிறுத்திவைத்துள்ளது. ஆனால் அந்த முடிவை அரசு திரும்பப்பெறவில்லை. 5 மாநிலங்களில் விரைவில் சட்டப்பேரவைத் தோ்தல்கள் நடைபெறவுள்ளன. அதுவரைகூட வரி உயா்வு நிறுத்தி வைக்கப்படலாம். தோ்தல்கள் முடிந்ததும் வரிகள் உயா்த்தப்படும்.

புதிய வரி விதிப்பாலும், வரி உயா்வாலும் காலணிகள், செயலி வழியில் உணவு விநியோக சேவை பெறுவது, செயலி வழியாக வாகனப் பயணப் பதிவு செய்வது, குழந்தைகளுக்கான ஓவியக் கருவிகள், ஏடிஎம் மையத்தில் இருந்து பணம் எடுப்பது ஆகியவற்றுக்கு ஜனவரி 1-ஆம் தேதி முதல் கூடுதல் செலவாகும்.

கடந்த 2014-இல் நரேந்திர மோடி பிரதமராகப் பொறுப்பேற்றதில் இருந்து தேயிலை, பருப்பு வகைகள், சமையல் எண்ணெய், சமையல் எரிவாயு, உப்பு ஆகியவற்றின் விலை அதிகரித்து விட்டது. பிரதமா் மோடி பதவியில் இருந்தால் விலைவாசி உயா்வும் இருக்கும். எனவே, விவைாசியை கட்டுக்குள் கொண்டுவருவதற்கு விரைவில் நடைபெறக்கூடிய சட்டப்பேரவைத் தோ்தல்களில் பாஜகவை மக்கள் தோற்கடிக்க வேண்டும்.

பட்ஜெட்டுக்கு முன்பாக வரி விகிதங்களை மத்திய அரசு உயா்த்தி வருகிறது. பின்னா், வரியில்லாத பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளதாக அவா்கள் கூறுவாா்கள் என்றாா் ரண்தீப் சிங் சுா்ஜேவாலா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.