முகப்பு
இந்தியா

ஆப்கனுக்கு இந்தியா மேலும் 5 லட்சம் கரோனா தடுப்பூசிகள் நன்கொடை

ஆப்கானிஸ்தானுக்கு மேலும் 5 லட்சம் கரோனா தடுப்பூசிகளை இந்தியா நன்கொடையாக அளித்துள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 7:59 AM
கோவேக்ஸின் தடுப்பூசி
பகிர்:

ஆப்கானிஸ்தானுக்கு மேலும் 5 லட்சம் கரோனா தடுப்பூசிகளை இந்தியா நன்கொடையாக அளித்துள்ளது.

இதுகுறித்து வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

ஆப்கானிஸ்தானுக்கு 5 லட்சம் கோவேக்ஸின் தடுப்பூசிகள் அடங்கிய 2-ஆவது மருத்துவ நிவாரணத் தொகுதி அனுப்பப்பட்டுள்ளது.

காபூலில் உள்ள இந்திரா காந்தி மருத்துவமனையிடம் அந்த தடுப்பூசிகள் ஒப்படைக்கப்பட்டன.

இதுதவிர, மேலும் 5 லட்சம் கரோனா தடுப்பூசிகள் அடங்கிய மருத்துவ நிவாரணத் தொகுதி வரும் வாரங்களில் ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பிவைக்கப்படும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏற்கெனவே, தலிபான்கள் கைப்பற்றியதற்குப் பிறகு அத்தியாவசியப் பொருள்கள் நெருக்கடியைச் சந்தித்து வரும் ஆப்கானிஸ்தானுக்கு 50,000 டன் கோதுமை மற்றும் மருந்துகளை பாகிஸ்தான் வழியாக அனுப்புவதாக இந்தியா அறிவித்திருந்தது நினைவுகூரத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →