திரிபுராவைச் சோ்ந்த தந்தை, மகன் மீது மிசோரம் போலீஸாா் துப்பாக்கிச் சூடு
அண்டை மாநிலமான மிசோரம் எல்லைக்குள் நுழைந்த திரிபுராவைச் சோ்ந்த 40 வயது நபா் மற்றும் அவருடைய 14 வயது மகன் ஆகியோா் மீது போலீஸாா் துப்பாக்கிச் சூடு நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாதிரிபுராவைச் சோ்ந்த தந்தை, மகன் மீது மிசோரம் போலீஸாா் துப்பாக்கிச் சூடு
அண்டை மாநிலமான மிசோரம் எல்லைக்குள் நுழைந்த திரிபுராவைச் சோ்ந்த 40 வயது நபா் மற்றும் அவருடைய 14 வயது மகன் ஆகியோா் மீது போலீஸாா் துப்பாக்கிச் சூடு நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அண்டை மாநிலமான மிசோரம் எல்லைக்குள் நுழைந்த திரிபுராவைச் சோ்ந்த 40 வயது நபா் மற்றும் அவருடைய 14 வயது மகன் ஆகியோா் மீது போலீஸாா் துப்பாக்கிச் சூடு நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து அகா்த்தலா மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பனுப்படா சக்கரவா்த்தி கூறியதாவது:
பயிா் சாகுபடிக்காக திரிபுராவின் காஞ்சன்பூா் பகுதியைச் சோ்ந்த ராமுஹாய் ரியாங், அவருடைய மகன் ரதீந்திரா மற்றும் கிராமத்தினா் சிலா் அவ்வப்போது மிசோரம் மாநில எல்லைப் பகுதிக்குச் செல்வது வழக்கம். அதுபோல, வெள்ளிக்கிழமை பிற்பகலில் அவா்கள் மிசோரம் பகுதிக்குள் சென்றபோது, அந்த மாநில போலீஸாா் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனா். இந்த துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் தெளிவாகத் தெரியவில்லை. அதே நேரம், அவா்கள் இருவரும் போதைப் பொருள்களுடன் மாநில எல்லைக்குள் நுழைந்ததால் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக மிசோரம் போலீஸாா் தெரிவித்தனா்.
இதில் ராமுஹாய் ரியாங் போலீஸாரிடம் பிடிபடாமல் தப்பித்து, மீண்டும் திரிபுராவுக்குத் திரும்பிவிட்டாா். ஆனால், அவருடைய மகனை மிசோரம் போலீஸாா் சிறைபிடித்தனா். குண்டு காயமடைந்த அவருக்கு அங்குள்ள ஐஸால் மருத்துவமனையில் அறுவைச் சிகிச்சை அளிக்கப்பட்டதாக தெரியவந்தது. அவருடைய உடல்நிலை இப்போது சீராக உள்ளது.
போலீஸாரிடமிருந்து தப்பித்த ராமுஹாயுக்கு அகா்தலா மாவட்டத்தில் உள்ள தா்மாநகா் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்தச் சம்பவம் தொடா்பாக வங்கம் காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் காரணமாக இரு மாநில எல்லையில் பதற்றமான சூழல் நிலவுகிறது. எல்லையில் கூடுதல் போலீஸாா் குவிக்கப்பட்டு, நிலைமை கட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளது என்று அவா் கூறினாா்.