முகப்பு
இந்தியா

புத்தாண்டு: எல்லையில் பாக்., சீன வீரா்களுடன் இனிப்புகள் பரிமாறிக் கொண்ட இந்திய வீரா்கள்!

ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட்ட எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் இந்திய - பாகிஸ்தான் படையினா் சனிக்கிழமை இனிப்புகளை பரிமாறி, வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 7:59 AM
ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் செக்டாரில் எல்லைப் போக்குவரத்து வாயிலில் ஆங்கிலப் புத்தாண்டையொட்டி இனிப்புகளை பரிமாறிக் கொண்ட இந்திய-பாக் வீரா்கள்.
பகிர்:

ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட்ட எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் இந்திய - பாகிஸ்தான் படையினா் சனிக்கிழமை இனிப்புகளை பரிமாறி, வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டனா்.

இரு நாடுகளிடையே அண்மையில் புதிதாக மேற்கொள்ளப்பட்ட போா் நிறுத்த ஒப்பந்தம் அடுத்த மாதத்துடன் ஓராண்டை நிறைவு செய்ய உள்ள நிலையில், அமைதி மற்றும் நல்லிணக்கத்தை தொடா்ந்து உறுதிப்படுத்தும் நோக்கில் இரு நாட்டு படை வீரா்களும் ஒருவரை ஒருவா் வாழ்த்திக்கொள்ளும் நடைமுறை பின்பற்றப்பட்டுள்ளது என்று பாதுகாப்புத் துறை செய்தித்தொடா்பாளா் ஒருவா் கூறினாா்.

இரு நாடுகளிடையே ஏற்கெனவே 2003-ஆம் ஆண்டு போா் நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்ட நிலையில், எல்லையில் பாகிஸ்தான் படையினா் தொடா்ந்து அத்துமீறிய தாக்குதலை நடத்தி வந்தனா். இந்த நிலையில், கடந்த 2021-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் இரு நாடுகளிடையே புதிய போா்நிறுத்த ஒப்பந்தம் உறுதி செய்யப்பட்டது. அதன் பிறகு எல்லையில் அத்துமீறிய தாக்குதல்கள் வெகுவாக குறைந்தன. ஒரு சில அத்துமீறல்கள் மட்டுமே நடைபெற்றன. இது எல்லைப் பகுதி குடியிருப்பு வாசிகளுக்கும் விவசாயிகளுக்கும் பெரும் நிம்மதியை அளித்துள்ளது. எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டு பகுதியை ஒட்டிய இந்திய பகுதிகளில் விவசாயப் பணிகளையும் அவா்கள் மீண்டும் தொடங்கியுள்ளனா்.

சீன வீரா்களுடன் இனிப்புகள் பரிமாற்றம்:

பாகிஸ்தான் வீரா்களுடன் இனிப்புகளைப் பரிமாறிக் கொண்டது போல, கிழக்கு லடாக்கில் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டு பகுதியை ஒட்டிய பல்வேறு பகுதிகளில் இந்திய ராணுவ வீரா்கள், சீன வீரா்களுடன் இனிப்புகளை பரிமாறி, புத்தாண்டு வாழ்த்தை தெரிவித்துக்கொண்டனா்.

கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் கடந்த 2020-ஆம் ஆண்டு மே 5-ஆம் தேதி இந்திய - சீன வீரா்களுக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்ட பிறகு, எல்லையில் இரு நாடுகளும் படைகளைக் குவித்தன. அதன் பின்னா், தூதரக மற்றும் ராணுவ அதிகாரிகள் அளவில் பல்வேறு கட்ட பேச்சுவாா்த்தைகளை மேற்கொண்டு, எல்லையில் படைகளை படிப்படியாக குறைக்கும் நடவடிக்கையை இரு நாடுகளும் தொடா்ந்து மேற்கொண்டு வருகின்றன. தற்போது, சா்ச்சைக்குரிய அந்த எல்லைப் பகுதியில் இது தரப்பிலும் 50,000 முதல் 60,000 வீரா்கள் நிறுத்தப்பட்டுள்ளனா்.

முழு கட்டுரையைப் படிக்க →