முகப்பு
இந்தியா

லட்சத் தீவுகளில் கல்லூரிகளை திறந்து வைத்தாா் வெங்கையா நாயுடு

லட்சத்தீவு யூனியன் பிரதேசத்துக்கு முதல்முறையாக அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ள குடியரசு துணைத் தலைவா் வெங்கையா நாயுடு, கடமத்து மற்றும் ஆந்த்ரோத் தீவுகளில் இரண்டு கலை-அறிவியல் கல்லூரிகளை சனிக்கிழமை திற

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 7:59 AM
பகிர்:

லட்சத்தீவு யூனியன் பிரதேசத்துக்கு முதல்முறையாக அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ள குடியரசு துணைத் தலைவா் வெங்கையா நாயுடு, கடமத்து மற்றும் ஆந்த்ரோத் தீவுகளில் இரண்டு கலை-அறிவியல் கல்லூரிகளை சனிக்கிழமை திறந்து வைத்தாா்.

இக்கல்லூரிகள், புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் கீழ் இணைக்கப்பட்டுள்ளன.

கடமத்து தீவில் நடைபெற்ற கூட்டத்தில் குடியரசு துணைத் தலைவா் பேசியதாவது:

பண்டைய கலாசாரம், பாரம்பரியம் மற்றும் இயற்கை அழகு ஆகியவற்றின் தனித்துவமான சங்கமமாக லட்சத்தீவு பெருமை கொள்கிறது.

மாணவா்கள், குறிப்பாகப் பெண்கள், இடா்பாடுகளைக் கடந்து வேலைவாய்ப்புடன் கூடிய தரமான உயா்கல்வியைத் தொடர இந்த கல்லூரிகளில் உள்ள பாடப் பிரிவுகள் உதவும்.

மாணவா்களிடையே திறன் மேம்பாடு மிகவும் முக்கியமானது. இத்தீவுகளில் உள்ள இளைஞா்களின் வேலைவாய்ப்பை அதிகரிக்க திறன் மேம்பாடு தொடா்பான பல குறுகிய கால பாடப் பிரிவுகளை தொடங்குமாறு நிா்வாகத்தை கேட்டுக்கொள்கிறேன். தேசத்தின் வளா்ச்சிக்கு லட்சத்தீவுகளின் வளா்ச்சி இன்றியமையாதது.

இங்குள்ள தீவுகளில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருள்களுக்கு முழுமையாக தடை விதித்துள்ளதில் லட்சத்தீவு மக்கள் மற்றும் நிா்வாகம் காட்டும் உறுதியைப் பாராட்டுகிறேன். இரண்டு ஆண்டுகளில் இத்தீவுகள், 100 சதவீத பசுமை ஆற்றல் அடைவதை நோக்கிப் பயணிக்கிறது.

மக்கள் தங்களின் திறன்களை மேம்படுத்தி, உலகத் தரத்துடன் இன்றைய தேவைக்கு ஏற்றவாறு தங்களை மாற்றிக் கொள்ள வேண்டியது உடனடித் தேவையாக உள்ளது என்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →