கோப்புப்படம் 
இந்தியா

பலூன் நிரப்ப பயன்படும் சிலிண்டர் வெடித்து விபத்து; மூன்று குழந்தைகள் படுகாயம்

பலூன்களை வாங்குவதற்காக நிறைய குழந்தைகள் அங்கு கூடி இருந்ததாகவும் விபத்தில் சிக்கியவர்களில் ஒரு குழந்தையின் உடல்நிலை அபாய கட்டத்தில் உள்ளதாகவும் காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர். 

DIN

மத்தியப் பிரதேசத்தில் பலூன்களில் காற்று நிரப்ப பயன்படும் சிலிண்டர் வெடித்து விபத்துக்குள்ளானதில் மூன்று குழந்தைகள் உள்பட ஐந்து பேர் காயம் அடைந்துள்ளனர். உஜ்ஜைனியில் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது மக்கள் கூட்டம் அதிகமுள்ள இடத்தில் பலூன் விற்பவர் காற்றை நிரப்பிக் கொண்டிருந்தபோது விபத்து நடைபெற்றதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

பலூன்களை வாங்குவதற்காக நிறைய குழந்தைகள் அங்கு கூடி இருந்ததாகவும் விபத்தில் சிக்கியவர்களில் ஒரு குழந்தையின் உடல்நிலை அபாய கட்டத்தில் உள்ளதாகவும் காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர். 

விபத்தில் சிக்கிய மற்றவர்கள் உள்ளூர் மருத்துவமனையில் சிசிச்சை பெற்றுவருகின்றனர். படுகாயம் அடைந்த ஒரு குழந்தைக்கு மட்டும் இந்தூரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.

இதுகுறித்து உள்ளூர் அலுவலுர் ப்ரீத்தி கெய்க்வாட் கூறுகையில், "சிலிண்டரில் ஹைட்ரஜன் வாயு தவறாக கலந்ததால் விபத்து ஏற்பட்டது. சேதமடைந்த சிலிண்டரின் பாகங்கள் ஆய்வுக்காக ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன" என்றார்.

விபத்து குறித்து பேசிய பலூன் வியாபாரி அல்தாப் ஷா, "கடையை திறக்க ஏற்பாடு செய்து கொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டது" என்றார். கரோனா அச்சத்திற்கு இடையே, உள்ளூர் அரசியல்வாதி ஏற்பாடு செய்த விழாவின் போது இந்த விபத்து நடைபெற்றுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உத்தரகண்டில் நிலச்சரிவு: வீடுகள் இடிந்து விழுந்ததில் 5 பேர் மாயம்!

வயநாட்டில் பழங்குடியினரை சந்தித்த பிரியங்கா காந்தி!

சென்னை விமான நிலையத்தில் ரூ.20 கோடி போதைப் பொருள் பறிமுதல்

பாகிஸ்தானைத் தாக்கினால் செளதி களமிறங்கும்! உடன்பாடு கையொப்பம்!

நடிகர் ரோபோ சங்கர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி!

SCROLL FOR NEXT