இந்தியா

ஐஎன்எஸ் விக்ராந்தை பார்வையிட்ட குடியரசு துணைத்தலைவர்

உள்நாட்டிலேயே கட்டமைக்கப்படும் விமானம் தாங்கி கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்தை குடியரசு துணைத்தலைவர் எம் வெங்கய்ய நாயுடு கொச்சியில் இன்று பார்வையிட்டார்.

DIN

உள்நாட்டிலேயே கட்டமைக்கப்படும் விமானம் தாங்கி கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்தை குடியரசு துணைத்தலைவர் எம் வெங்கய்ய நாயுடு கொச்சியில் இன்று பார்வையிட்டார்.

இந்தியாவின் மாபெரும் அடையாளமாக அது திகழ்வதாக புகழாரம் சூட்டிய அவர், உள்நாட்டிலேயே கட்டமைக்கப்படும் விமானம் தாங்கி கப்பலுக்கான தேசத்தின் கனவு நனவை ஐஎன்எஸ் விக்ராந்த் நனவாக்கி உள்ளதாக கூறினார்.

கொச்சின் ஷிப்யார்ட் லிமிடெட்டின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் மது எஸ் நாயர் மற்றும் இந்திய கடற்படை அதிகாரிகள் கப்பலின் கட்டுமான செயல்முறை குறித்து அவரிடம் விளக்கினர். 

கொச்சியில் உள்ள டிஆர்டிஓவின் கடற்படை இயற்பியல் மற்றும் கடல்சார் ஆய்வகத்தில் பின்னர் நடந்த நிகழ்வில் உரையாற்றிய வெங்கய்ய நாயுடு, ஐஎன்எஸ் விக்ராந்தைப் பார்வையிட்டதில் மகிழ்ச்சி அடைவதாகவும், அது ஒரு 'தொழில்நுட்ப அற்புதம்' என்றும் கூறினார்.

விமானம் தாங்கி கப்பலை உருவாக்குவதில் இந்திய கடற்படைக்கும் கொச்சின் ஷிப்யார்ட் லிமிடெட் நிறுவனத்திற்கும் இடையிலான ஒத்துழைப்பை அவர் பாராட்டினார். கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான், கேரள அரசின் தொழில் துறை அமைச்சர் பி ராஜீவ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பேச்சுக்கு நடுவில் கடுப்பான Seeman! மேடையிலிருந்து இறங்கியதால் பரபரப்பு! | NTK

உக்ரைனுக்கு நேட்டோவில் இடமில்லை! டிரம்ப் அறிவிப்பு

நேட்டோவில் இணைய முடியாது.. ஸெலன்ஸ்கிக்கு டிரம்ப் தகவல்!

ஐ. பெரியசாமி மீதான சொத்துக்குவிப்பு வழக்கு: இடைக்காலத் தடை விதித்த உச்சநீதிமன்றம்!

தங்கம் - வெள்ளி விலை நிலவரம்!

SCROLL FOR NEXT