இந்தியா

கர்நாடகத்தில் கரோனா பாதிப்பு 10,000-யைக் கடந்தது!

DIN

கர்நாடகத்தில் 3 மாதங்களுக்குப் பிறகு கரோனா பாதிப்பு 10 ஆயிரத்தைக் கடந்துள்ளது. 

கரோனாவின் உருமாறிய வகையான ஒமைக்ரான் தொற்று வேகமாகப் பரவி வருகிறது. கரோனா பரவல் அதிகரித்து வருவதால் பெரும்பாலான மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு, பொது இடங்களில் கட்டுப்பாடுகள் என அமல்படுத்தப்பட்டுள்ளன. 

மாநிலங்களிலும் கரோனா பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், கர்நாடகத்தில் 3 மாதங்களுக்குப் பிறகு கரோனா பாதிப்பு 10 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் கரோனா பரவல் குறைந்து வந்த நிலையில் டிசம்பரில் அதிகரிக்கத் தொடங்கியது. ஜனவரி 1 ஆம் தேதி கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 9,386 ஆக உயர்ந்த நிலையில், இன்று 10 ஆயிரத்தைக் கடந்துள்ளது. 

இன்றைய நிலவரப்படி, கர்நாடகத்தில் 10,292 பேர் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் நேற்று 10 பேருக்கு ஒமைக்ரான் உறுதியான நிலையில் மொத்தமாக ஒமைக்ரான் பாதிப்பு 76 ஆக அதிகரித்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ப்ளே ஆஃப் வாய்ப்பை தக்க வைக்குமா கொல்கத்தா?

தமிழ்க் காதல் பாடல்கள் தமிழ் அகப் பாடல்கள் - பொருள் விளக்கம்

ஏன் இத்தனை பதற்றத்தை ஏற்படுத்துகிறீர்கள்?

பர்மா - ஓர் அரசியல் வரலாறு

விழிகளில் ஒளியேற்றும் சங்கர நேத்ராலயா

SCROLL FOR NEXT